ரகசியமாய் புன்னகையித்தால் 48❤️‍🔥

543 17 4
                                    

புன்னகை 48

யாழி , முகிலரசன் மற்றும் மாறனின் பெயர்களை கூறியதும் பரிதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் ஜீவாவிற்கு அழைத்தான். ஆனால் எத்தனை முறை அழைத்தும் ஜீவா அழைப்பை ஏற்கவில்லை.

பரிதியிடம் பேசி வைத்ததும் ஜீவாவிற்கு கண்கள் கலங்கியது... மீண்டும் அவளை இழந்துவிடுவோம் என்று தோன்றிய எண்ணமே உள்ளுக்குள் பயத்தை தோற்றுவிக்க அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்தவன் கண்மூடி யோசித்தான். பின்னர் யோசனை வந்தவனாய் நேரே ஏர்போர்ட்டிற்கு விரைந்தான்.

தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து தரை இறங்கிய விமானத்தின் பேசஞ்சர் லிஸ்ட்டை வாங்கி பார்க்க இனியின் பெயரை அதில் பார்த்ததும் தான் மூச்சே வந்தது. உடனே பரிதிக்கு அழைத்து விஷயத்தை கூறினான்.

ஜீவா - பரிதி அவ இங்க தான் வந்திருக்கா.. நீங்க ஒன்னும் பயப்படாம இருங்க.

பரிதி - அங்க வந்திருக்காளா ??? என்ன அண்ணே சொல்ற தனியா அவ்ளோ தூரம்... சொல்லிட்டாவது வந்திருக்கலாம்ல... இங்க எல்லாரும் எவ்ளோ பயந்துட்டோம். முதல்ல அந்த எரும கிட்ட போன குடுங்க நல்லா நாலு வார்த்தை திட்டுனா தான் என் மனசு ஆரும்

ஜீவா - நா இன்னும் அவளை பாக்கல பரிதி... ஒரு டவுட்ல ஏர்போர்ட்ல் வந்து பேசஞ்சர் லிஸ்ட் வாங்கி பாத்தேன் அவ பேர் இருக்கு... ஆபிஸ் இல்லன்னா வீட்டுக்கு தான் போயிருப்பா... நா பாத்திட்டு கூப்பிடுறேன்



பரிதி - ஆனா அவளுக்கு அங்க வீடோ இல்ல ஆபிஸ் அட்ரஸோ தெரியாதே

ஜீவா - நா பாத்திட்டு கூப்பிடுறேன் டா... எல்லாரையும் டென்ஷன் பண்ணுறதே இவளுக்கு வேலையா போச்சு.. என்று கடிந்தபடி அவன் வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு அவள் வந்திருக்கவில்லை... அலுவலகம் சென்றிருப்பாளோ என்று அங்கும் போய் தேடி பார்க்க அங்கும் அவள் இல்லை... ஒருவேலை மருத்துவமனைக்கு தந்தையை பார்க்க சென்றிருப்பாளோ என்று எண்ணி அவன் அன்னைக்கு அழைக்க அவரும் அங்கு வரவில்லை என்று கூறிவிட்டார்.



ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now