ரகசியமாய் புன்னகையித்தால் 7❤️‍🔥

713 22 0
                                    


புன்னகை 7

கையும் வாயும் உணவு உண்ணும் வேலையை செவ்வென செய்திட யாழியின் மனது மட்டும் பரிதியின் நினைவிலே தவித்துகொண்டு இருந்தது. நம்ம கிளம்புன்னு சொன்னா உடனே கிளம்பிடுவானா இத்தன நாள் கழிச்சு பாக்குறோமே கொஞ்ச நாள் கூடவே தங்கியிருந்து ஆறுதலா இருக்கலாம்னு இருக்கா என்று பரிதியை மனதில் வறுத்தெடுத்து கொண்டிருந்தாள் யாழ்மொழி



நீ தான டி அவன் வீட்ல இருந்தா வீட்ட விட்டு போயிடுவேன்னு மிரட்டுன அதான் பொய்ட்டான் என்று அவள் மனம் கூற மிரட்டுனா போயிடுவானா , கூட இருந்து சமாதானம் கூட பண்ண முடியாதோ என்று மனதிற்குள்ளே மாறி மாறி பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்க தங்கையின் முகபாவங்கள் பார்த்துக்கொண்டிருந்த இனிக்கு சிரிப்பு தான் வந்தது கூடவே சற்று பயமும்  வந்தது. மனது தன்னவனை பார்க்க ஏங்கினாலும் அவன் இப்போது இந்தியா வராமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது

-----

மாலை விசிட்டிங் ஹவர்ஸில் பரிதியை அழைத்துக்கொண்டு ஜீவா மருத்துவமனைக்கு சென்றான்

ஜீவாவை அங்கு எதிர்பாராத ரோஜா மகழிச்சியில் கண்கள் கலங்க அவனை வரவேற்றார்

ரோஜா - எப்படி பா இருக்க நாங்க எல்லாம் உயிரோட இருக்குறது உனக்கு இப்போதான் நியாபகம் வந்துச்சா என்றார் வருத்தத்துடன்

பரிதி - ஐயோ என்ன பெரியம்மா இப்படி பேசுறீங்க, நீங்க மூணு பேரும் நம்ம ஊர்ல இருந்து கிளம்பி பெரியப்பா ட்ரீட்மெண்ட்டுக்கா சென்னை வந்ததுக்கப்புறம் ஊர்ல பிரச்சனை பெருசாகி நிலமை ரொம்ப மோசமாகிடுச்சு. யாராலையும் எதுவும் பண்ண முடியாத நிலமை அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சென்னைல வந்து ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சப்போ தான் தெரிஞ்சது நீங்க ஆஸ்திரியா வந்துட்டீங்கன்னு. ஊர்லயும் நிலமை சரியில்ல இங்க நீங்க எங்க இருக்கீங்கன்னும் தெரியல எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு வர முடியல பெரியம்மா மன்னிச்சிடுங்க என்றான் அவர் கைகளை பிடித்துக்கொண்டு



ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now