ரகசியமாய் புன்னகையித்தால் 15❤️‍🔥

539 12 1
                                    

புன்னகை 15

பரிதிக்கு அன்று யாழி தன்னை புருஷன் என்று கூறி சென்றதில் இருந்து கால் தரையில் நிற்கவில்லை மேகத்தில் மிதந்து கொண்டிருந்தான். யாழிக்கு தன்னையும் மீறி மனதில் இருந்த ஆசை வார்த்தையாய் வந்துவிட பரிதியை கண்கொண்டு பார்ப்பதையே தவிற்க்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் பரிதியோ அவளை பார்ப்பதற்காகவே அவள் வீட்டிலேயே தவமாய் தவமிருக்க யாழியோ இவனுக்கு தரிசனம் தராமல் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள், இவ்வாறாக ஒருவாரம் இளாவின் எதிரில் வராமல் இவனை காக்க வைக்க இதற்குமேல் பொறுக்க முடியாதென்று வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து யாழியிடம் பேச வந்தான். அருகில் ஆள் வந்து அமர்வது கூட தெரியாமல் டிவியில் மூழ்கியிருந்தாள் யாழி

"அடிப்பாவி பக்கத்துல ஆள் வந்து உட்கார்ந்து இருக்குறது கூட தெரியாம இப்படி டிவி பாத்திட்டு இருக்காளே, அதுவும் நல்லது தான் நம்ம வந்தது தெரிஞ்சது  குடுகுடுன்னு உள்ள ஓடிருவா" என்று மனதில் நினைத்துக்கொண்டவன் அருகில் அமர்ந்து அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்

டிவியில் கண் பதித்திருந்த யாழி ஏதோ ஒரு உந்துதலில் திரும்ப இளா அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவனை அங்கு பார்த்ததும் பதறியவள் "நீ எப்போ டா வந்த" என்றாள் படபடப்புடன்

பரிதி - மேடம் நா வந்தது கூட தெரியாம அவ்ளோ ஆர்வமா படம் பாத்திட்டு இருக்கீங்க என்றதும் ஈஈ..என்று சிரித்தவள் எழுந்து உள்ளே ஓட பார்க்க இளா அவள் கைகளை பற்றியவன் தன் அருகில் அமர வைத்துக்கொண்டான் 

யாழியும் எதுவும் பேசாமல் நெளிந்தபடி அவன் அருகில் அமர்ந்திருந்தாள், கண்கள் படபடத்தபடி இருக்க கைகள் நடுங்க ஆரம்பித்தது . பரிதிக்கு தெரியும் பதின் வயதில் தோன்றும் குழப்பம் ஆசை உள்ளிருந்து கிளர்ந்து எழும் உணர்ச்சிகள், அவனும் அந்த பருவத்தை கடந்து வந்தவன் தானே எனவே யாழியை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது மெதுவாக அவள் கைகளை விடுவித்தவன்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now