ரகசியமாய் புன்னகையித்தால் 39❤️‍🔥

469 15 2
                                    

புன்னகை 39

மறுநாள் காலை இனி சற்று தாமதமாக எழுந்தாள். பொழுது நன்றாக விடிந்திருந்தது, பதறியடித்து எழுந்து அமர்ந்து நேரத்தை பார்த்தவள் இவ்வுளவு நேரம் உறங்கியதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டு குளித்து முடித்து வெளியில் வந்து பார்க்க ஜீவாவும் பரிதியும் சமைக்கிறேன் பேர்வழி கிட்சனையே அலங்கோலம் செய்து கொண்டிருந்தனர்.

இனி இவர்கள் செய்யும் கூத்தை பார்த்து இதழ் பிரியாமல் ஒரு புன்னகையை உதிர்த்தவள் ஜீவாவை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். தான் அன்று பேசிய வார்த்தைகள் இன்னமும் தன் மனதில் ரணமாய் இருக்க இவன் மட்டும் எப்படி எதுவுமே நடவாதது போல் தன்னிடம் எப்போதும் பேசுவது போல பேசுகிறான் என்று யோசித்து கொண்டிருக்க அவள் காது மடல் அருகே சூடான காற்று பரவ சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் ஜீவா நெருக்கத்தில் நின்றிருப்பத்தை பார்த்து இமைகள் படபடக்க நின்றாள். அவள் படபடப்பை பார்த்து ரசித்தவன் அழகாய் புன்னகைக்க இனி சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்றாள்.

நா டிஸ்டர்ப் பண்ணல நீங்க கண்டின்யூ பண்ணுங்க நா என் ஆள பாக்க போறேன் என்று பாலினை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டான் பரிதி.

ஜீவா அவன் சென்றதும் இனியின் கண்களை காண அவன் கண்களில் தெரிந்த காதல் ஏக்கம் தவிப்பு என அனைத்தும் இனியின் மனதை அசைத்து பார்க்க அவன் பார்வையின் தாக்கத்தை தாளாமல் தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள் இனி

செல்லம்மா உனக்கு நியாபகம் இருக்கா ஒருமுறை காலையிலே என் வீட்டுக்கு வந்து என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு என்கூட தூங்கிட்டு இருந்த. அப்புறம் நா எழுந்து நம்ம ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்திட்டு வந்தேன், நீ கூட கேட்டியே கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி டெய்லி பெட் காபி குடுப்பியா மாமான்னு என்று கூற அவள் எப்படி மறப்பாள் அவனுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவள் வாழ்க்கையின் பொக்கிஷம் அல்லவா

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now