ரகசியமாய் புன்னகையித்தால் 34❤️‍🔥

391 11 2
                                    

புன்னகை 34



குமரனையும் ரோஜாவையும் பரிசோதித்த மருத்துவர் ரோஜாவிற்கு சிகிச்சை அளிக்க குமரனுக்கு முதலுதவி மட்டும் கொடுத்தவர்கள் இங்கு அவரை காப்பாற்றுவது கடினம் சென்னைக்கு எடுத்து செல்லுமாறு கூறிவிட ஜீவாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பெற்றவர்களின் நிலைமை இப்படி இருக்க ஊர்காரரிடம் விசாரித்ததன் மூலம் ஓரளவே விஷயம் தெரிந்துக்கொண்டவனுக்கு அங்கு இதழும் குடும்பமும் எப்படி இருக்கிறார்கள் என்று முழுவதுமாக தெரியவில்லை மாறன் அவர்களை என்ன செய்திருப்பானென்று நினைக்கவே மனது பதைபதைத்தது. இப்போது மருத்துவர் வேறு இவ்வாறு சொன்னதும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது ஜீவாவிற்கு. தன்னை ஈன்றவர்கள் ஒருபுறம் உயிருக்கு போராட தன் உயிரானவளுக்கும் குடும்பத்தவருக்கும் என்ன நேர்ந்ததென்றே தெரியவில்லை இத்தனைக்கும் காரணமானவன் மாறன் என்று தெரிந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தை நினைத்து ஓ வென்று கதறி அழவேண்டும் போல் இருந்தது ஜீவாவிற்கு .

ஜீவாவின் மனம் இவ்வாறாக பலவித யோசனையில் இருக்க மருத்துவர் நீங்க லேட் பண்ணுற ஒவ்வொரு செக்கண்டும் அவருக்கு ஆபத்து. உங்க அம்மாவையும் இவரோட சேர்த்து நாங்க ஷிபிட் பண்ண ஹெல்ப் பண்ணுறோம் சென்னை வரைக்கும் ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்து விடுறோம் அதுக்கு அப்புறம் நீங்க தான் பாத்துக்கணும் என்று கூற அழுது சோர்ந்து போவதற்கு இது நேரமில்லை என்று உணர்ந்தான் ஜீவா. தன்னை மீட்டெடுத்துக்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை பார்த்தான் 

-----------------------

வெற்றி மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்க்க ஒரே இருட்டாக இருந்தது அவன் இருந்த அறையில் ஒரு ஊசி அளவு கூட வெளிச்சம் நுழையவில்லை. நாளை விருந்திற்காக காய் கறிகளை சரி பார்க்க கடைக்காரருடன் பேசியபடி பரிதியும் இவனும் காய்கறி குடவுணுக்குள் நுழைந்தது தான் நியாபகம் வந்தது பின்னர் யாரோ பின்னந்தலையில் இருவரையும் பலமாக அடிக்க மயங்கி விழுந்தனர் இருவரும். நடந்ததை நினைவு படுத்தி பார்த்த வெற்றி பரிதியும் தன்னுடன் தான் இருக்கிறானா என்று சுற்றும் முற்றும் பார்வை செலுத்த, பலன் என்னவோ பூஜ்யம் தான் நூலளவு வெளிச்சம் இருந்தாலாவது எதையாவது கண்கள் தேடும் ஆனால் இந்த மை இருட்டில் தேடுவது வீண் என்று புரிந்தது வெற்றிக்கு .

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now