ரகசியமாய் புன்னகையித்தால் 33❤️‍🔥

408 10 0
                                    


புன்னகை 33

மயங்கி கிடந்த சூர்யாவை மீனாட்சி ஓடிச்சென்று அணைத்து அழ

மாறன் அவன் அடியாட்களிடம் "டேய் மெதுவா அடிக்க மாட்டிங்களா டா, பாரு பொசுக்குன்னு மயக்கம் போட்டுட்டான். அவனுக்கு தண்ணி எதாவது குடுங்க செத்துர போறான்" என்று கூற மீனாட்சி அவளே அவனை தூக்கிச்சென்று அறைக்குள் இருந்த பெட்டில் படுக்கவைத்து அவனுக்கு தண்ணீர் புகட்டினாள்

மாறனும் பெரிதாக அவர்களை கண்டுக்கொள்ளவில்லை

சூர்யா தண்ணீர் குடித்ததும் சற்று தெளிவடைந்தவன் கண்களை திறக்க மீனாட்சிக்கு அப்போது தான் உயிரே வந்தது.

சூர்யா - மீனு கா எனக்கு ஒண்ணுமில்லை சும்மா அவனுங்களை ஏமாத்துறதுக்கு மயக்கம் போட்டு விழுந்தேன் என்று நலிவடைந்த குரலில் கூற மீனாட்சிக்கு கண் கலங்கியது. அவன் தலையை வருடியவள் முதலில் தன் தம்பியை இவர்களிடமிருந்து தப்பிக்க வைக்க எண்ணினாள் . அந்த அறையை ஒட்டி இருக்கும் பாத்ரூமில் இருந்த ஜன்னல் கண்ணாடியை பார்த்தவள் அது சூர்யா நுழையும் அளவு இருந்தது எனவே அதை கழட்டி அதில் அவனை தப்பிக்க வைக்க எண்ணி கண்ணாடியை கழட்ட தொடங்கினாள்

வெளியில் மாறன் உட்பட அனைவரின் கவனமும் இனியின் மீதிருந்ததால் இவர்களை மறந்திருந்தனர்

ஜன்னல் கண்ணாடிகளை கழட்டிவிட்டு பார்த்தவளுக்கு மாறன் ஜீவாவை கொள்ள போவதாக சொன்னது நியாபகத்திற்கு வந்தது. சூர்யாவின் கைகளை பற்றியவள் "சூர்யா அவன் ஜீவா சாரை கொள்ள போறதா சொன்னான்ல, இப்போ உன்னால மட்டும் தான் அவருக்கு உதவி பண்ண முடியும். அவரை அவரோட வீட்ல வெச்சு தான் ஏதோ பண்ண போறானுங்க அவர் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி நீ அவர் வீட்டுக்கு போயி அவரை எச்சரிக்கை பண்ணனும்" என்று கூற.

சூர்யா - நீ ஒன்னும் கவலை படாத மீனு கா, ஜீவா சாரை காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு என்று பெரிய மனிதன் போல் பேசியவன் அந்த வலியிலும் அழகாக புன்னகைத்தான். அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவள் ஜாக்கிரதை என்று கூறி தன் உயிரின் ஒரு பாதியை காப்பாற்ற மற்றோரு பாதியை அனுப்பிவைத்தாள் மீனாட்சி

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now