ரகசியமாய் புன்னகையித்தால் 9❤️‍🔥

649 15 3
                                    





புன்னகை 9


மறுநாள் காலை இனி எழுந்து சமைத்து வைத்துவிட்டு அலுவலகம் கிளம்ப தயாராகிக்கொண்டு இருக்க, அதை பார்த்த யாழிக்கு தன் அக்காவின் மீது கோபமாக வந்தது . எப்படி நேத்து எதுவுமே நடக்காத மாதிரி இப்படி ஆபிஸ் கிளம்பிட்டு இருக்கா என்று மனசில் நினைத்தவள் வாய் விட்டே கேட்டுவிட்டாள்

யாழி - அக்கா நீ பண்ணுறதெல்லாம் பாத்தா எனக்கு கடுப்பா இருக்கு

இனி எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருக்க

யாழி - இத்தனை வருஷம் கழிச்சு மாமா நேத்து வந்துச்சு ஒரு வார்த்தை அது கிட்ட பேசுனியா சரி அதெல்லாம் விடு திடீர்னு அந்த மாறன் எங்க இருந்து வந்தான். அதுவும் அவன் கூட கை கோர்த்துட்டு உள்ள வர. உன்ன அந்த நிலைமைல பாத்த மாமா மனசு எப்படி துடிச்சு இருக்கும்

இனி எதுவும் பேசாமல் தன் தங்கையிடம் மெல்லிய புன்னகை சிந்தியவள் "பெரிய மனுஷி காலேஜுக்கு டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்புங்க...பெட் மேல காசு வெச்சிருக்கேன் செலவுக்கு எடுத்துக்கோ" என்று நகர

யாழி - நா உன்கிட்ட தான் கா பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க

இனி - அப்படின்னா இதுல பேச எதுவும் இல்லன்னு அர்த்தம்

"அதெப்படி மொழி அவ பேசுவா, சின்னதா எறும்பு கடுச்சா கூட என்கிட்ட சொல்லுவா ஆனா இப்போலாம் என்னென்னமோ நடக்குது என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல" என்று விரக்தியான புன்னகையுடன் அவள் பின்னே நின்றிருந்தான் பரிதி

இனி - வா பரிதி என்று அழைக்க பரிதிக்கு பின்னால் ஜீவாவும் உள்ளே நுழைந்தான். ஜீவாவை பார்த்ததும் வார்ததை வராமல் தவித்தவள் பின்னர் வா மாமா என்று அழைக்க ஜீவா உட்பட மற்ற மூவருக்குமே அவள் அவனிடம் பேசியது ஆச்சரியமே

ஜீவாவிற்கு  அந்த ஆச்சர்யம் ஒரு நொடி தான் தன்னவள் விடும் மூச்சு காற்றிலே அவள் மனநிலையை அறிந்து கொள்பவனுக்கு அவள் வாய் விட்டு தன்னை அழைத்ததும் புரிந்துக்கொண்டான் அவனின் இதழின் இதழில் இருந்து நேற்று நடந்தவைகளை பற்றி எந்த வார்த்தையும் வரப்போவது இல்லையென்று

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now