ரகசியமாய் புன்னகையித்தால் 32❤️‍🔥

410 10 1
                                    

புன்னகை 32

அன்று காலை....

இனி மருதாணி கேட்டிருந்ததால் தங்கள் தோட்டத்தில் இருந்த மருதாணி செடியின் இலைகளை பறித்து அரைத்து எடுத்துக்கொண்டு வந்திருந்தனர் மீனாட்சியும் சூர்யாவும்.

யாழி - என்ன டா சுறா ஸ்கூலுக்கு லீவு போட்டியா

சூர்யா - ஆமா கா நம்ம இனி கா வுக்கு கல்யாணம், எப்படி நா ஸ்கூலுக்கு போவேன்

யாழி - எப்பவுமே நீ போகலானா என்னமோ அன்னைக்கு ஸ்கூலே நடக்காதுங்கிற மாதிரி லீவு போட யோசிப்பியே அதான் கேட்டேன்

சூர்யா - இனி கா கல்யாணத்துக்கு என்னென்ன பண்ணுறாங்கன்னு பாத்தா தானே மீனு கா கல்யாணத்துக்கு நா எல்லாம் கரெக்டா பண்ண முடியும் என்று கூற அனைவரும் அவன் பாசத்தை நினைத்து பெருமை கொண்டனர்

இனி குளித்து முடித்து வந்தவள் விளக்கேற்றி சாமி கும்பிட்டாள். கடவுளே என் வேலு மாமாவ  எனக்கே குடுத்ததுக்கு ரொம்ப நன்றி பா என்று சாமிக்கு நன்றி தெரிவிக்க எந்த கடவுளும் அவள் நன்றியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவளுக்கு யார் சொல்வது.

இனி - மீனாட்சி, எல்லாரும் வேலையா இருக்காங்க நீங்களே மருதாணி வெச்சு விடுங்களேன் என்று ஆசையாய் கேட்க மறுக்க தோன்றாமல் புன்னகையுடன் அவளுக்கு வைத்துவிட்டாள் மீனாட்சி 

மருதாணியை காய வைத்தபடி எல்லாரையும் வேலை செய்ய விடாமல் வம்பு செய்துக்கொண்டிருந்தாள் இனி

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ஜீவா, இனியிடம் ரெஜிஸ்டார் கேட்ட டாகுமெண்ட்டுகளை வாங்கி போக வந்திருந்தான்.

ஜீவா  - இதழ் உன்னோட சர்டிபிகேட்லாம் வேணும் கொஞ்சம் எடுத்துகுடு என்க மாமா கைல மருதாணி இருக்கு நீ வா நா காமிக்குறேன் நீ எடுத்துக்கோ என்று கூற கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல் இதைவிட எனக்கு வேற என்ன டி வேலை என்றவன் இனி அறைக்குள் நுழைய அவள் பின்னாலே நுழைந்து கதவை தாழிட்டான்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now