ரகசியமாய் புன்னகையித்தால் 29❤️‍🔥

405 12 1
                                    

புன்னகை 29

வாசலில் முகிலரசன், சுமதி மற்றும் பத்ரி நின்றுக்கொண்டிருக்க பத்ரியை பார்த்த லதாவிற்கு அவன் முகம் எங்கோ பார்த்தது(அன்று பத்ரியும் மாறனும் தங்கள் வீட்டிற்கு வரும்போது பார்த்திருந்தார்) போல் நியாபம் இருந்தது "உள்ள வாங்க" என்று அழைத்து அமர வைத்தார்

இனி இவர்களை வந்திருந்ததால் உள்ளே போக முகிலரசனும் சுமதியும் பத்ரியிடம் இது தான் பொண்ணா என்று கண்ஜாடையில் கேட்க ஆமாம் என்றான் பத்ரி

பாண்டியன் முகிலரசனை கண்டுக்கொண்டார் "ஐயா நீங்க வீடு தேடி வந்திருக்கீங்க...என்ன விஷயம்னு தம்பி(மாறன்) கிட்ட சொல்லியிருந்தா நாங்களே வந்திருப்போமே"

முகிலரசன் - இல்லங்க சில விஷயம் பெரியவங்க நாங்களே வந்து நேர்ல பேசினா தான நல்லா இருக்கும்

சுமதி - ஏங்க சுத்தி வலைக்குறீங்க, நா நேரா விஷயத்துக்கு வந்திடுறேன் எங்க பையனுக்கு உங்க பொண்ண கேட்டு வந்திருக்கோம் என்றதும் பாண்டியனுக்கும் லதாவிற்கும் எப்படி இவர்களை சமாளிப்பது என்று தெரியவில்லை

சுமதி - நீங்க என் பையனை நேர்ல பாத்திருக்கீங்க, பையனும் பொண்ண பாத்திருக்கான் என்று அவர் அடுத்து பேசும் முன்னர் "அம்மா ஒரு நிமிஷம்" என்று இனி அறையிலிருந்து வெளியில் வந்தாள்

இனி - அம்மா எங்களை மன்னிச்சிருங்க, எனக்கு ஏற்கனவே என் மாமா கூட கல்யாணம் பேசியாச்சு என்க சுமதிக்கு முகிலரசனுக்கும் இந்த விஷயம் தெரியாது. இனிக்கு ஜீவாவை திருமணம் செய்ய போகிறார்கள் என்ற செய்தியை பத்ரி இவர்களிடமிருந்து மறைத்துவிட்டான்

இனி கூறிய விஷயம் இருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த,இனி மற்றும் ஜீவாவின் காதலை அறியாதவர்கள் இனி சொன்னவர் வீட்டில் பார்த்த மாப்பிளையாக இருக்கும் இன்னும் இவர்கள் இருவரும் நேரில் பார்த்து கூட பேசியிருக்க மாட்டார்கள் என்று எண்ணினார் சுமதி.
தன் மகன் இவள் மீது உயிரே வைத்திருக்கிறான் என்று கூறினால்  இனி மனம் மாற வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து தன் ஒரே மகனின் ஆசைக்காக பேச ஆரம்பித்தார்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now