ரகசியமாய் புன்னகையித்தால் 13❤️‍🔥

558 13 1
                                    

புன்னகை 13

மா எக்ஸாமுக்கு டைம் ஆச்சு மா சைக்கிள் வேற பங்சர் ஆகிருச்சு என்று கண்ணில் தண்ணீர் வராதா குறையாக கத்திக்கொண்டு இருந்தாள் யாழி

லதா - ஸ்கூல் போற புள்ள சைக்கிள் சரியா இருக்கான்னு பாத்துக்குறது இல்லையா என்று மகளை திட்ட

யாழி - அப்பா எங்க மா

லதா - அப்பா வெளில போயிருக்காரு டி, ஜீவாவும் அப்பா கூட போயிருக்கான். பரிதியை வேணா கூப்பிட்டு போறியா

யாழி - ஐயோ அவன் வேணாம் மா. வேற யார் கூட வேணாலும் போவேன் அவன் கூட எல்லாம் போக மாட்டேன்

இதழினி அப்போதுதான் தூங்கி எழுந்து வந்தவள் இவர்கள் உரையாடலை கேட்டபடி இவர்களிடம் வந்தாள். யாழி அவ்வாறு கூறியதும் தன் நண்பனுக்காக நியாயம் கேட்க வந்தாள்

இதழினி - ஏன் டி அவன் கூட போனா என்ன உனக்கு. இரு அவனுக்கு போன் பண்ணுறேன்

யாழி - அவன் இங்க வந்தாலும் நா அவன் கூட போகமாட்டேன் என்று அடம் பிடிக்க இதழினி அதை கண்டுக்கொள்ளாமல் பரிதிக்கு அழைத்தாள். அவள் பேசி வைத்த அடுத்த 5 நிமிடத்தில் பரிதி வீடு வந்து சேர்ந்தான்

விசில் அடித்தபடி வீட்டில் நுழைந்தவன் "யாருக்கு இங்க அவசரமா என் உதவி தேவை படுது " என்று கேட்க யாழிக்கு கோவம் தலைக்கேறியது

யாழி - மா இவனை கிளம்பி போக சொல்லு நா நடந்தே கூட போகுறேன் இவன் கூட எல்லாம் என்னால போக முடியாது என்று கத்தினாள்

பரிதியும் வேண்டும் என்றே அவளை சீண்டும் பொருட்டு "ஆதி இவளை கூட்டிட்டு போகவா என்னை இப்படி அவசரமா வர சொன்ன, அங்க நிலத்துல எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா" என்று கேட்க

யாழி - ஆமா ஆமா அப்படியே ஏறு உழுது கஷ்டப்படுறாரு, நல்லா வேப்ப மரத்துக்கு அடியில கயித்து கட்டிலு போட்டுக்கிட்டு வேலா வேலைக்கு சாப்பாடு முழுங்கிட்டு படுத்துக்கிடக்குறதுக்கு இவ்ளோ பில்டப்பு தேவையா என்று கூற

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now