ரகசியமாய் புன்னகையித்தால் 44❤️‍🔥

467 17 1
                                    

புன்னகை 44

வெற்றி கையில் கட்டுடன் வெளியில் அமர்ந்திருக்க. அவனை கண்டதும் அவன் அருகில் ஓடி வந்தனர் அனைவரும். மீனாட்சி மற்றும் இதழின் விழிகள் சூர்யாவை தேடின.

பரிதி - மாமா என்ன ஆச்சு கைக்கு, அண்ணே எங்க

இதழ் - சூர்யா எங்க அண்ணா என்றாள் தவிப்புடன். வெற்றி பெறு மூச்சு விட்டபடி மாறன் வீட்டில் நடந்தவைகளை கூறினான். சூர்யா இப்போ முழுசா மாறி இருக்கான் பழசு எதுவுமே நியாபகம் இல்லை என்றான். அனைவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

வெற்றி பேசிக்கொண்டே இருக்க மீனாட்சியால் தம்பியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. வேகமாக வெற்றி அமர்ந்திருந்ததற்கு எதிரில் இருந்த அறையினுள் நுழைய சூர்யாவிற்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து கொண்டிருந்தனர்.

இனிமேல் பார்க்கவே முடியாது என்று நினைத்து இருந்த தன் தம்பி இதோ இன்று உயிருடன் முழுவதுமாக தன் முன் இருக்கிறான். நினைக்கும்போதே ஆனந்தத்தில் கண்கள் கரித்துக்கொண்டு வர அப்படியே சுவற்றில் சாய்ந்தாள். சர்வா ஓடி வந்து தன் மனைவியை தாங்கிக்கொண்டான்.

சர்வா இது நம்ம சூர்யா தான்.. நீங்க அவன் எப்படி இருப்பான்னு கேட்டுட்டு இருப்பீங்க இல்ல.. இதோ இப்போ நேர்லையே வந்திருக்கான்... மறுபடியும் எனக்காக வந்திருக்கான் என்று மகிழ்ச்சியில் பேசுபவளை கண்களில் கண்ணீருடனும் உதட்டில் புன்னகையுடனும் பார்த்திருந்தான் சர்வா.

மருத்துவர்கள் வந்து சத்தம் போடாதீர்கள் என்று கடிந்து விட்டு யாரையும் சிறிது நேரத்திற்கு உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றிருந்தனர்.

இதழுக்கு இப்போது தான் மனதில் இத்தனை நாள் அழுத்திக்கொண்டு இருந்த பெரும் குற்ற உணர்ச்சி மறைந்தது. ஆசையாக மீனு கா, இனி கா என்று சுற்றிக்கொண்டு இருந்தவனின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்து இத்தனை நாளாக மனதிற்குள் புழுங்கி கொண்டு இருந்தாள்.

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now