ரகசியமாய் புன்னகையித்தால் 49❤️‍🔥

649 14 2
                                    

புன்னகை 49

மறுநாள் காலை ஜீவா குளித்து முடித்து கீழே வர இனி ரோஜாவுடன் வலவலத்துக்கொண்டு இருந்தாள் . சமயலறையின் கதவில் சாய்ந்து நின்று சிறிது நேரம் அவளை ரசித்தவன் "அம்மா நா ஹாஸ்பிடல் கிளம்புறேன் " என்றான்

இனி - நாங்களும் வரோம் இரு மாமா என்க அவளை சீண்டி பார்க்க நினைத்தவன்.

ஜீவா - நீ என்ன இங்கையே தங்குறதா முடிவு பண்ணிட்டியா??? ஊருக்கு எப்போ கிளம்புற என்று கேட்க இனியின் முகம் சுருங்கி விட்டது.

மருமகளின் முகம் வாடுவதை பொறுக்க முடியாமல் " என்ன பா புள்ள நேத்து தான வந்துச்சு இன்னும் ரெண்டு மூணு வாரம் இங்கையே இருக்கட்டுமே" என்றார் ரோஜா .

ஜீவா - அம்மா இவ இங்க இருந்தா அம்முவை யாரு பாத்துக்குறது. இவ தான பொறுப்பா அவளை பாத்துக்கணும்.. இங்க வந்து உட்கார்ந்து இருந்தா சரி பட்டு வராது என்று இனியிடம் திரும்பியவன்" இனி ஊருக்கு தனியா போறியா இல்ல நா வந்து விட்டுட்டு வரவா??? டிக்கெட் போடணும்" என்று கேட்க

இனி "நேத்து நைட் நல்லா இனிக்க இனிக்க பேசிட்டு இப்போ ஊருக்கு துரத்தி விடுறதை பாரு" என்று மனதிற்குள் அவனை திட்டினாள்.

ஜீவா அவளை கண்டுக்கொல்லாமல் "அம்மா நா லஞ்ச்க்கு வீட்டுக்கு வருவேன் மா" என்று விட்டு கிளம்பினான். அவன் கிளம்பியதும் அத்தையிடம் சண்டைக்கு நின்றாள் இனி.

இனி - அத்தை மாமா பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல.. நா ஊருக்கு போக மாட்டேன்

ரோஜா - நா சொல்லுறேன் மா அவன் கிட்ட, நீ வருத்தபடாத. இன்னும் ரெண்டு வாரம்னாலும் இங்கையே இரு.. உனக்கு எப்போ ஊருக்கு போகனும்னு தோணுதோ அப்போ கிளம்பு.

இனி - நானெல்லாம் இனிமே எங்கேயும் போறதா இல்ல ஒழுங்கா மாமாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க. இப்போ தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு இல்ல.. மாமாவை எனக்கு கட்டி வைக்காம என்ன பண்ணறீங்க

ரோஜா - அது சரி.. விட்டா நீயே அவனை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்ப போல

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now