ரகசியமாய் புன்னகையித்தால் 51❤️‍🔥(இறுதி பாகம்)

1.2K 26 28
                                    

புன்னகை 51

"இங்க பாரு ஆதி, நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல" என்று பரிதி கத்திக்கொண்டு இருந்தான்.

யாழியும் ஜீவாவும் பரிதியை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர் .

மாமா இந்த பக்கம் திரும்பு என்று இனி கூற இன்னும் 1 மணி நேரத்தில் தன் மனைவியாகப் போகிறவளின் புறம் திரும்பினான் ஜீவா.

ஜீவாவை நான் தான் தயார் செய்வேன் என்று தன்னை சீக்கிரமே அலங்கரித்துக்கொண்டவள் ஜீவாவிற்கு என்று கோவிலில் ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

பரிதியோ நான் என் அண்ணனை ரெடி பண்ணுவேன் என்று குதிக்க அதெல்லாம் இனியிடம் செல்லுபடியாகுமா.

ஜீவா குளித்து முடித்து வந்ததில் இருந்து, அவனிற்கு தலை துவட்டுவது முதல் ஷர்ட்டில் கப் பட்டன் போடும் வரையில் அவளே செய்ய ஜீவாவிற்கு சொல்லவா வேண்டும். தன்னவளின் மை தீட்டிய விழிகள், நெற்றிப்பொட்டு, கன்னம் தொட்டு ஆடும் ஜிமிக்கி , எப்போது வேண்டுமானாலும் என்னை கவ்விக்கொள் என்று உசுப்பேற்றும் இதழ்கள் என்று சிவப்பு நிற பட்டில் மணப்பெண்ணாய் நின்றவளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டு இருந்தான்.

கண்ணாடி வளையல்கள், நாங்கள் மணப்பெண்ணை அலங்கரித்துவிட்டோம் என்று அவள் கைகளில் சத்தமிட்டபடி ஜீவாவின் நெற்றியில் விபூதி வைத்தது. அவன் கண்களில் விபூதி விழுந்து விடாமல் இருக்க அவன் உயரத்திற்கு எக்கி ஊதி விட்டாள் இனி.

இனி - ரொம்ப அழகா இருக்க மாமா...நானே கண்ணு வெச்சிருவேன்னு நினைக்கிறேன் என்று கூறியவளின் குரல் தழுதழுக்க கண்கள் கலங்கியது. உதட்டை கடித்து கண்ணீரை கட்டுப்படுத்த அவள் கன்னத்தை அல்லி நெற்றியில் இதழ் பத்தித்தான்.

ஜீவா - அத்தையும் மாமாவும் எங்கயும் போகல இதழ் நம்மள சுத்தி தான் இருப்பாங்க, நம்மள இப்படி பார்த்து ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க என்று கூற இனி கண்களை துடைத்துக்கொண்டு புன்னகையுடன் தலையசைத்தாள்.

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now