ரகசியமாய் புன்னகையித்தால் 38❤️‍🔥

429 16 2
                                    


புன்னகை 38

காரிலிருந்து இறங்கிய பரிதி யாழியின் வீட்டில் காலி செய்து எடுத்து வந்த பைகளை ஒவ்வொன்றாக உள்ளே எடுத்து செல்ல யாழியும் அவனுடன் சேர்ந்து சில பைகளை எடுத்து சென்றாள்.

இருவரும் ஒருவை முகத்தை ஒருவர் நிமிர்ந்து பார்த்துக்கொள்ளவில்லை.

மாலை வந்து வீட்டை காலி செய்து தங்களுடன் கிளம்பி வருமாறு கூறிவிட்டு ஜீவா சென்றிருக்க, யாழி இனி என்ன சொல்லுவாளோ என்று யோசித்து எதையும் எடுத்து வைக்காமல் அப்படியே இருந்தாள்.

மாலை ஜீவாவும் பரிதியும் யாழியை வந்து பார்க்க அவள் எதையும் எடுத்து வைக்காமல் இருப்பதை பார்த்தவர்கள் இனியை தான் பார்த்துகொள்வதாக ஜீவா கூறியதும் மறுக்க முடியாமல் யாழி பரிதியுடன் கிளம்ப ஜீவா இனியை பார்க்க கிளம்பியிருந்தான்

ஒருவழியாக இருவரும் அனைத்து பொருட்களையும் வீட்டுக்குள் எடுத்து வைத்திருந்தனர்.

பரிதி யாழின் முகம் பாராமலே உனக்கு எந்த ரூம் படிக்க வசதியா இருக்கோ அதை எடுத்துக்கோ திங்ஸ்லாம் நான் எடுத்திட்டு வந்து வெச்சிடுறேன் என்று கூற

என்னை பாத்துக்க எனக்கு தெரியும் உன் அக்கறை ஒன்னும் எனக்கு தேவை இல்ல என்று வெடுக்கென்று கூறியவள் வீட்டை சுற்றி பார்க்க சென்றுவிட பரிதி பெருமூச்சு விட்டபடி அவளுக்கு சாப்பிட எதாவது செய்து தர சமயலறைக்கு சென்றான்.

5 நிமிடத்தில் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வந்தவள் அவளுக்கான அறையினுள் அவள் பொருட்களை எடுத்து சென்று வைத்துக்கொண்டாள்.

பரிதி அவளுக்காக பஜ்ஜியுடன் சுடச்சுட பாலும் எடுத்துக்கொண்டு அவளை வீடு முழுக்க தேடியவன் இறுதியாக அவள் இருந்த அறையை கண்டுபிடித்து கதவை தட்ட சலித்தபடி அவனை திட்டலாம் என்று கதவை திறக்க கையில் பஜ்ஜியும் பாலுடன் நின்றிருந்தவனை பார்க்க திட்ட மனம் வரவில்லை என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனதல்லவா

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now