ரகசியமாய் புன்னகையித்தால் 35❤️‍🔥

432 11 2
                                    

புன்னகை 35

தலை சுளீரென்று வலிக்க தன் பெயரை யாரோ தூரத்தில் அழைப்பது போல் இருக்க மெல்ல மெல்ல கண்களை திறந்தான் பரிதி. தூரத்தில் கேட்ட குரல் இப்போது பக்கத்தில் கேட்க கண்கள் திறந்தும் வெளிச்சம் எதுவும் படவில்லை கண்களை நன்றாக விரித்து பார்த்தும் எந்த பயனும் இல்லை முழுக்க இருட்டாக இருந்தது. இன்னமும் தன் பெயரை யாரோ அழைக்க அது வெற்றியின் குரல் என்று உணரவே சிறிது நேரம் பிடித்தது பரிதிக்கு

மாமா நா இங்க பக்கத்துல தான் இருக்கேன் என்று பரிதியும் குரல் கொடுத்தான்

வெற்றி - டேய் உனக்கு ஒன்னும் இல்ல இல்ல

பரிதி - இல்ல மாமா , நம்ம இங்க எப்படி வந்தோம்

வெற்றி - எல்லாம் அந்த மாறனோட வேலையா இருக்கும் பரிதி , முதல்ல இங்க இருந்து தப்பிக்கணும் டா. எல்லாரும் என்ன நிலைமையில இருக்காங்களோ தெரியல, ஜீவா தனியா இருப்பான் என்று நண்பனின் நிலையை எண்ணி அலைபாய்ந்தது மனது.

பரிதி - மாமா முதல்ல வந்து என் கட்டை கழட்டி விடு என்று இருவரும் குரல் வரும் திசையை வைத்து நகர்ந்து வந்து ஒன்று சேர்ந்தனர். பின்னர் கட்டுகளை அவிழ்த்துக்கொள்ள சுவற்றை பிடித்து கதவினை தேட கதவு கிடைக்கவில்லை

பரிதி - மாமா ஒருவேளை அண்டர் கிரவுண்டா இருக்குமோ என்று கூற அவன் கூறியது போலவே அறையின் நடுவில் இருந்த இரும்பு ஏணி அறையின் கதவுக்கு வழி காட்டியது. அனைத்து அடியாட்களும் மாறனுடன் நிச்சயத்தில் இருக்க இருவர் மட்டும் தான் இவர்கள் காவலுக்கு இருந்தனர். அவர்களும் இரவு முழுவதும் காவல் காத்து இப்போது அசந்து தூங்கிக்கொண்டிருக்க பரிதிக்கும் வெற்றிக்கும் கதவினை உடைத்து அவர்களை அடித்துப்போட்டு தப்பித்து வர அவ்வுளவு கஷ்டமாக இல்லை

தப்பித்து வெகு தூரம் வந்தவர்கள் ஒரு வழிப்போக்கரிடம் போனை வாங்கி ஜீவாவிற்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்தது பின்னர் வெற்றி தன் மனைவி காயத்ரிக்கு அழைத்தான், இரவு முழுக்க கணவனை காணமால் ஊரில் நடக்கும் அனைத்தையும் பார்த்து பயந்து இருந்தாள் காயத்ரி. இவன் அழைப்பிற்காகவே காத்திருந்தவள் போல போன் அடித்த ஒரே ரிங்கில் எடுத்தாள்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥حيث تعيش القصص. اكتشف الآن