ரகசியமாய் புன்னகையித்தால் 26❤️‍🔥

449 14 2
                                    

புன்னகை 26

இருவருக்குள்ளும் இருந்த கோவமும் வருத்தமும் போய் விட்டதா என்று கேட்டால் இருவரிடமும் பதில் இல்லை ஆனால் என்ன நடந்தாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போமென்று உறுதிப்படுத்தியது போல் இருந்தது அந்த அணைப்பு

மறுநாள் காலையிலேயே கோபாலனும் மலரும் இனியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

பாண்டியன் - வாங்க மாப்பிள்ளை வா மா, ஒரே ஊருன்னு தான் பேரு அண்ணனை பாக்க இப்போ தான் என் தங்கச்சிக்கு நேரம் இருக்கு என்று தங்கச்சியிடம் குறைபட்டுக்கொள்ள

மலர் - என்னன்னே பண்ணுறது பூனையை மடியில கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு என் பொழப்பு , எப்போ என்ன நடக்கும்னே தெரியல என்று ஓரக்கண்ணால் தன் கணவனை பார்த்துக் கூறியவர் இதுல எங்க நிம்மதியா நாலு இடத்துக்கு வந்து போறது என்று ஏற்ற இறக்கத்துடன் முடிக்க கோபாலன் இவரை முறைக்க அமைதியாகி விட்டார்

இருவருக்கும் மோர் கொண்டு வந்த லதா "நாங்களே உங்கள பாக்க வரலாம்னு தான் இருந்தோம் மலரு" என்றார்

மலர் - என்ன அண்ணி எதாவது விசேஷமா

லதா - நம்ம ரோஜா அடுத்த வாரம் இங்க வராளாம்

மலர் - இப்பயாச்சும் அவளுக்கு வரணும்னு தோணுச்சே. நான் தான் ஒண்ணுத்துக்கும் உருப்புடாம உள்ளூர்லயே வாக்கப்பட்டு ஒண்ணுமில்லாம போயிட்டேன் பரவால்ல என் அக்காவாச்சும் ரெண்டு நாடு நாளு ஊர்னு போயி வந்து சந்தோஷமா இருக்கட்டும் என்று தன் ஆதங்கத்தை தெரிவிக்க மீண்டும் கோபாலன் முறைக்க என பேச்சு தொடர்ந்தது

பாண்டியன் - சொல்லுங்க மாப்பிள்ளை

கோபாலன் - மாமா வர 10 ஆந்தேதி நல்ல நாள்னு ஜோசியர் குறிச்சு குடுத்திருக்காரு அன்னைக்கே தேங்கா மண்டியை தொறந்திறலாம்ன்னு இருக்கோம் என்று மகிழ்சசியுடன் கூற

பாண்டியன் - 10 ஆந்தேதி யா இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு ..என்று யோசித்தவர் கேலண்டரை பார்த்துவிட்டு நம்ம பெரியவ 14 ஆந்தேதி ஊருக்கு வருது 15 உம் நல்ல நாள் தான் அன்னைக்கு வெச்சுக்கலாமே. விசேஷத்துக்கு விசேஷமும் ஆச்சு தங்கச்சியும் இருந்த மாதிரியும் ஆச்சு என்றதும் கோபாலனின் முகம் சுருங்கிவிட்டது

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now