ரகசியமாய் புன்னகையித்தால் 46❤️‍🔥

513 16 2
                                    

புன்னகை 46

தன்னவனிடம் இருந்து இதழை பிரித்தவள் அவனை அணைத்து அவன் நெஞ்சில் முட்டி நின்றாள். கண்கள் கறித்துக்கொண்டு வர "மன்னிச்சிடு மாமா" என்று குரல் கம்ம கூறியவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி முறைத்து நின்றான் ஜீவா.

யார கேட்டு அப்படி ஒரு முடிவெடுத்த என்றான் அடிக்குரலில், அவனின் கோவமான குரல் இனிக்கு பயத்தை அளித்தது. மிரண்டு நின்றவள் உடல் நடுங்க  "இ...இல்ல மாமா.. அப்போ இருந்த நிலமையில எனக்கு வேற வழி தெரியல. அவங்களுக்கு இருந்த ஒரே சொந்தமும் உனக்காக விட்டு குடுக்க துணிஞ்சாங்க.." என்று வார்த்தையை மென்று விழுங்க 

ஜீவா - அதுக்காக என்னை விட்டு குடுக்க தயாராகிட்ட.. அப்போ நா உன்மேல வெச்சிருந்த காதல் எல்லாம் உனக்கு பெருசா தெரியல என்று ஆதங்கத்துடன் கேட்க

இனி - அப்படியில்ல மாமா.. எனக்கு வேற வழி தெரியல.. அவங்க தம்பியை இழந்திட்டு தனியா நின்னப்போ நீ தான் அவங்களுக்கு ஒரு நல்ல துணையா இருப்பன்னு தோணுச்சு

இனி அவளை நியாய படுத்தி பேச பேச ஜீவாவிற்கு கோவம் அதிகரித்து கொண்டே போனது.

ஜீவா - அதுதான் என்னை இன்னொருத்திக்கு விட்டு குடுக்க நெனச்சல்ல இப்போ மட்டும் எதுக்கு என்கிட்ட வந்து உறவாடிட்டு இருக்க.. விட்டு குடுக்க முடிவெடுத்தது முடிவெடுத்தாவே இருக்கட்டும்.. என்னை விட்டுட்டு என்று கையெடுத்து கும்பிட்டான்.

இனி - இல்ல வேலு மாமா இனிமே இல்ல எப்பவும் உன்ன யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன் என்று அவனை நெருங்க.

ஜீவா - உனக்கு வேணும்னா நீ ஏத்துக்குறதுக்கும் வேணாம்னா தூக்கி போடுறதுக்கும் நா ஒன்னும் பொம்மை இல்ல இதழ். எத்தன வாட்டி கெஞ்சியிருப்பேன் என்ன பிரச்சனை என்ன மறைக்கிறன்னு, ஒரு முறையாச்சும் என்கிட்ட சொல்லணும்னு தோனுச்சா..ஏன் சொல்லல ஏன்னா என் மேல உனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல..நீ உண்மையை என்கிட்ட சொன்னா மாறன் கண்டிப்பா பிரச்சனை பண்ணுவான்னு நம்புன இல்ல,  அந்த மாறன் மேல வெச்சிருந்த நம்பிக்கை கூட நீ என்மேல வெக்கல இல்ல செல்லம்மா என்று மனம் உடைந்து கேட்க இனி உள்ளுக்குள் செத்துக்கொண்டு இருந்தாள்.

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now