ரகசியமாய் புன்னகையித்தால் 18❤️‍🔥

489 13 4
                                    

புன்னகை 18

இதழினியின் வீட்டில் இருந்து கிளம்பிய மாறனும் பத்ரியும் நேராக சென்றது பத்ரியின் வீட்டிற்கு. பத்ரியும் மாறனை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறான் அவன் முகத்தில் நிலைகொண்டிருக்கும் புன்சிரிப்பை . அங்கு பேச போனது வேறு விஷயத்திற்கு ஆனால் நடந்ததோ வேறு விஷயம்

பத்ரி - அண்ணே என்ன விஷயம் மூஞ்சியெல்லாம் பல்லா இருக்கு

மாறன் - நீ அவளை பாத்தியா டா சும்மா அப்படி ஒரு அழகு தேவதை மாதிரி இருந்தா டா

பத்ரி மண்டையை சொறிந்துக்கொண்டே யார சொல்லுறாரு

மாறன் அவன் பேச்சை நிறுத்தவில்லை "அவ முகத்தை நா சரியா பாக்கல டா இருந்தாலும் எனக்கு தெரியும் உலகத்திலே ரொம்ப ரொம்ப அழகான பொண்ணு அவ தான்"

பத்ரி மண்டை காய்ந்தவனாக "யாரை அண்ணே சொல்லுற " என்றான்

மாறன் - என்ன டா இப்புடி கேக்குற அங்க தான் அந்த வீட்ல அவன் பேரு என்ன ஹான் அந்த பாண்டியன் வீட்டுக்கு போனோமே அந்த வீட்ல இருந்தாலே டா என் தேவதை

பத்ரி - யாருண்ணே தண்ணி கொண்டு வந்து வெச்சுச்சே அந்த பொம்பளையா, அது அந்த ஆளோட பொண்டாட்டி அண்ணே அத போய் தேவதைன்னு சொல்லிட்டு இருக்க. அதுக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்களே இருக்கு என்று கூற கடுப்பான மாறன் அவனை எட்டி உதைக்க குப்பற விழுந்தான் பத்ரி

மாறன் - அந்த அம்மாவை யாருடா சொன்னது அது பெத்த தேவதையை சொன்னேன் என்றதும் பத்ரி ஆர்வமாய் அவன் அருகில் அமர "வீட்டுக்குள்ள ஒரு பொண்ணு இருந்தா டா" என்றான் கண்களில் கனவு மின்ன

பத்ரி - ஆனா அவன் பொண்ணுங்கள தான் ஏற்கனவே அவன் தங்கச்சி பசங்களுக்கு குடுக்குறதா இருக்கானே

மாறன் - எப்போ அவ என் கண்ணுல பட்டாளோ அப்போவே எனக்கு சொந்தம்

ஒருவாரம் நகர்ந்து இருந்த நிலையில் அன்று சூர்யா பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருக்க வழியில் ஜீவாவை பார்த்தவன் அவன் அருகில் சென்று சைக்கிளை நிறுத்தினான்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now