ரகசியமாய் புன்னகையித்தால் 14❤️‍🔥

517 12 3
                                    

புன்னகை 14

மீனாட்சியும் இதழினியும் எதுவும் பேசிக்கொள்ளாமல் மீனாட்சியின் வீட்டை அடைந்தனர்.

இதழினி அவளை இறக்கிவிட்டு அப்படியே கிளம்ப பார்க்க மீனாட்சி அவளை வற்புறுத்தி உள்ளே அழைக்க மறுக்க முடியாமல் இதழும் உள்ளே சென்றாள்

உள்ளே சென்றவள் வாயடைத்து நின்றாள், வீடு அவ்வுளவு அழகாக இருந்தது. முற்றத்தை தாண்டி சிறியதாக ஒரு ஹால் ஹாலின் இடது புறம் படுக்கை அறையும் வலது புறம் சமையல் அறை இருந்தது. வீட்டின் பின்புறம் அழகாக தோட்டம் அமைத்து வீட்டிற்கு தேவையான காய்கறிகளும் பூச்செடிகளும் இருந்தது. இவருக்கான அளவான அழகான வீடாக இருந்தது, வீட்டை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது வீடு இத்தனை அழகு என்று 

இதழினி - வீடு ரொம்ப அழகா வெச்சிருக்கீங்க என்றாள் பூச்செடிகளை நோக்கி அடி எடுத்துவைத்தபடி

மீனாட்சி நன்றி கூறிவிட்டு சமயலறைக்குள் புகுந்து கொண்டாள். இதழினி செடிகளின் அருகில் சென்று அமர மெல்லிய காற்றில் செடிகள் அசைய ஏனோ அந்த அசைவு செடிகள் இவளை தலையாட்டி தங்கள் வீட்டிற்கு வரவேற்பதாக தோன்றியது, இதழினி மெதுவாக மண்டியிட்டு ரோஜா பூ செடியின் அருகில் அமர்ந்தாள் அந்த மஞ்சள் நிற ரோஜா மொட்டின் மீது காலையில் செடிக்கு ஊற்றிய தண்ணீரின் நீர்த்துளிகள் அழகாக அதன் இதழில் குடியிருக்க "ப்பா எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, நா மட்டும் ஒரு கவிஞனா இருந்திருந்தா உன்ன பத்தி அப்படியே பக்கம் பக்கமா கவிதை வடிச்சிருப்பேன்" என்று நாளை மலரவிருக்கும் மொட்டுடுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தாள் இதழினி.

மீனாட்சி இதழினிக்கு பழச்சாறு கொண்டு வந்தவள் அவள் செடிகளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து புன்னகையுடன் அவளிடம் வந்தவள் "சரியா போச்சு நீங்க இப்படி இவ கூட க்ளோஸ் ஆனது மட்டும் என் தம்பிக்கு தெரிஞ்சது அவ்வுளவு தான்" என்று கூறி பழச்சாற்றை அவளிடம் நீட்டினாள்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Donde viven las historias. Descúbrelo ahora