ரகசியமாய் புன்னகையித்தால் 40❤️‍🔥

476 16 2
                                    

புன்னகை 40

இதழினியை மாறனுடன் அலுவலகம் அனுப்பி வைத்த ஜீவாவை பார்த்து பரிதியும் யாழியும் முறைத்து கொண்டு இருந்தனர்.

பரிதி- எதுக்கு அண்ணே இப்போ அவனோட ஆதியை அனுப்பி வெச்ச

ஜீவா - அவ தான அவனை கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டா அதான் என்றான் அமைதியாக

யாழி - மாமா , அக்கா தான் லூசு மாதிரி எதோ சொல்லுறான்னா நீயும் அதையே சொல்லுற

ஜீவா - அவ அவளோட முடிவுல தெளிவா இருக்கன்னு தான் சொல்லுறா நம்ம ஏன் குறுக்க நிக்கணும்

யாழி - அப்போ நிஜமாவே அக்கா அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறாளா மாமா என்றாள் கண்களில் கண்ணீர் தேங்க

ஜீவா - லூசு அம்மு அப்படி அவளை அவனுக்கு குடுக்க தான் இத்தனை வருஷம் அவளை உயிருக்குள்ள வெச்சு பாத்துகிட்டனா. சில விஷயங்கள் எனக்கு இன்னும் முழுசா தெரியல அது எல்லாம் தெரியுற வரைக்கும் அந்த மாறன் கல்யாண பேச்ச எடுக்க கூடாது. நம்ம இனிய பாக்க அனுமதிக்கலன்னா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்ததோ அதே தான் இப்பவும் நடக்கும்

பரிதி - அதுக்காக ஆதிய அவன் கூட அனுப்புறது எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் அண்ணே

ஜீவா - நா இத வேற விதமா தான் ஹேன்டில் பண்ணனும்னு நெனச்சேன் ஆனா உன் பிரண்டு தான் என் மேல நம்பிக்கை இல்லாம மனசுக்கு உள்ளையே எல்லாம் வெச்சுகிட்டு அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன் நீங்க இதுல தலையிடாதீங்கன்னு வசனம் பேசி என்னை கடுப்பு ஏத்துனா அதுனால கொஞ்சம் அனுபவிக்கட்டும் என்று கூறியவனின் குரலில் அவள் தன்னை நம்பவில்லை என்ற கோவம் இருந்தது.

யாழிக்கும் பரிதிக்கும் ஜீவாவின் மேல் நம்பிக்கை இருந்ததால் அமைதியாக இருந்துவிட்டனர்

ஜீவா - சரி காலையில நம்ம விட்ட பஞ்சாயத்துக்கு வருவோம் என்று யாழியிடம் பார்வையை திருப்ப யாழிக்கு பயத்தில் உடம்பெல்லாம் வியர்த்தது.

யாழி - மாமா அது... நா என்று திணற

பரிதி - அண்ணே அவ எதோ கோவத்துல அப்படி பேசிட்டா நீ தான் காலையிலே திட்டிட்டியே மறுபடியும் திட்டனுமா என்று கேட்க யாழியும் பாவமாக முகத்தை வைத்து தலையாட்ட

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Wo Geschichten leben. Entdecke jetzt