ரகசியமாய் புன்னகையித்தால் 24❤️‍🔥

422 15 1
                                    

புன்னகை 24

பரிதி சத்தம் வந்த இடத்தை பார்க்க ஆட்டுக்குட்டி ஒன்று அந்த திசையில் ஓடிக்கொண்டிருந்தது, யாரும் பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன் யாழியை திரும்பி பார்க்க வெட்கத்தில் கன்னம் சிவந்திருந்தாலும் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்

பரிதி - எதுக்கு டி முறைக்கிற என்று மீண்டும் அவள் இடையை இழுத்து அணைக்க போக ஒட்றை விரல் உயர்த்தி அவனை மிரட்டியவள் "என்னமோ படுச்சு முடிக்கிற வரைக்கும் எதுவும் வேண்டாம்னு பெரிய இவன் மாதிரி பேசுன இப்போ எதுக்கு இப்படி பண்ண "

பரிதி - அடிப்பாவி முதல்ல நீ தான டி முத்தம் குடுக்க வந்த

யாழி - நா குடுக்க வந்தேன் ஆனா எங்க நீ குடுக்க விட்ட அதுக்குள்ள தான் வாயை கடுச்சு வச்சிட்டியே என்று அவள் உதட்டை பார்த்தபடி புலம்ப

பரிதி - நெருங்கி வந்தாலும் தப்புங்குறா விலகி போனாலும் தப்புங்குறா என்று முணுமுணுக்க அது யாழி காதில் நன்றாக விழுந்தது

யாழி - யோ மாமா கட்டிபிடிக்கலாம் முத்தம் குடுக்கலாம் ஆனா இதெல்லாம் நா மட்டும் தான் பண்ணுவேன் ஆனா நீ எனக்கு பண்ண கூடாது

பரிதி - எல்லாம் என் நேரம் சும்மா இருந்தவனை உசுப்பேத்திவிட்டு பாடம் எடுத்திட்டு இருக்க

யாழி - சரி சரி வா வீட்டுக்கு போலாம்

பரிதி - டியூஷன் போக வேணாமா

யாழி - டியூஷனும் இல்ல ஒன்னும் இல்ல சும்மா சொன்னேன்

பரிதி - சரி வந்ததும் வந்துட்டோம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்னு நெனச்சேன்  ஆதிக்கும் அண்ணாவுக்கும் எதாவது சண்டையா?? காலைல ஆதிக்கு உடம்பு முடியலன்னு சொல்லியும் அண்ணா அவளை பாக்காம கூட கிளம்பிருச்சு

யாழி எதையும் மறைக்காமல் இதழுக்கு மீனாட்சியின் மேல் எழுந்த சந்தேகம் அதை ஜீவாவிடம் கேட்டது ஜீவா அவளை அடித்தது என அனைத்தையும் கூறினாள்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now