ரகசியமாய் புன்னகையித்தால் 6❤️‍🔥

817 17 2
                                    


புன்னகை 6

தனது தம்பியின் பெயரை கேட்டதும் ஜுவாவிற்கு ஒருநிமிடம் தலைகால் புரியவில்லை உடனே அவன் அறையில் இருந்து லாபியை நோக்கி ஓட , வழியில் அவனுக்கு வணக்கம் வைத்த எவரும் இவன் கண்ணில் பதியவில்லை அவன் கவனம் முழுவதும் பரிதியை பார்பதில் தான் இருந்தது

லாபியில் நின்று ஆபிஸை அன்னாந்து ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தான் பரிதி. ப்பா இவ்ளோ பெரிய ஆபிஸ அண்ணா எப்படித்தான் மேனேஜ் பண்ணுதோ என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க டேய் பரிதி என்று தழுதழுக்க வந்த தன் அண்ணனின் குரலை கேட்டு திரும்பினான் பரிதி

பரிதி திரும்பியதும் நொடியும் தாமதிக்காமல் அவனை அணைத்துக் கொண்டு "எப்படி டா இருக்க" என்றான் ஜீவா

நல்லாருக்கேன் அண்ணே நீ எப்படி இருக்க பெரியம்மா பெரியப்பா எப்படி இருக்காங்க என்றான் அவன் அண்ணனின் தோளில் புதைந்து கொண்டு. இருக்காங்க டா என்று பதில் அளித்தவனுக்கோ அவனது அத்தை மாமா, சித்தி சித்தப்பா பற்றி கேட்க தோன்றினாலும் அவன் பிடிவாதம் அதற்கு இடம் குடுக்காமல் போக பேச்சை திசை மாற்றினான்

"எப்போ டா வந்த அட்ரெஸ் எப்படி கிடச்சது என்னை பாக்க வர இத்தனை வருஷம் ஆச்சா உனக்கு " என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு போக

அண்ணே எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொல்லுறேன் இப்போ பெரியப்பா பெரியம்மாவை பாக்க போலாமா என்றான் பரிதி

இப்போ விசிட்டிங் ஹவர்ஸ் இல்ல டா ஈவ்னிங் போவோம் எதாவது சாப்பிட்டியா என்று அவனை இழுத்துக்கொண்டு ரெஸ்டாரன்டிற்கு சென்றான். அவன் வழக்கமாக சாப்பிடும் இன்டியன் ரெஸ்டாரன்டிற்கு அழைத்து செல்ல இருவருக்கும் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து விட்டு பரிதி தங்கியிருந்த ஹோட்டல் ரூமை காலி செய்து கொண்டு ஜீவாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அலுவலகத்தில் பரிதியை பார்த்த மகிழ்ச்சியில் அவனிடம் பேசியதோடு சரி அதன் பிறகு பரிதியாக கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் வந்தது...அவன் மனதில் அவனவள் பற்றிய ஆயிரம் கேள்விகள் இருந்தது ஆனால் அதை கேட்க தான் அவன் காதல் கொண்ட மனது இறங்கி வரவில்லை ஏனெனில் அவ்வுளவு காயம் இருந்தது அவன் மனதில்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now