ரகசியமாய் புன்னகையித்தால் 25❤️‍🔥

420 16 2
                                    

ரகசியம் 25

இனிக்கும் ஜீவாவிற்கும் சண்டை என்று கேட்டதிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தான் மாறன். அதே துள்ளலுடன் உதட்டில் அளவில்லா புன்னகையை ஏந்தியபடி வீட்டினுள் நுழைந்தவன் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டான்

மகனின் நடவடிக்கைகளை கவனித்த முகிலரசனுக்கு சிறிது புரிந்தும் புரியாமல் இருந்தது. அவன் வயதை கடந்து வந்தவர் தானே ஆனால் இத்தனை நாள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் மகன் காதலில் விழுந்திருப்பானா என்ற சந்தேகமும் எழுந்தது

அறையிலிருந்து வெளியில் வந்த மாறன் தன் அன்னை சுமதியின் முந்தியை புடித்தபடி சுற்றிக்கொண்டிருந்தான். மாறன் அதீத மகிழ்ச்சியில் இருக்கும்போது இப்படித்தான் சுமதியிடம் வம்பு பண்ணிக்கொண்டிருப்பான், மாறனின் உண்மையான குணமறியாத அன்னையவளும் தன் வளர்ந்த குழந்தையின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருப்பார் 

மகனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த முகிலரசன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினார்

இரவு உணவிற்கு இனியின் வீட்டிற்கு வந்த ஜீவா தன் அன்னையும் தந்தையும் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வரும் விஷயத்தை கூற அனைவருக்கும் மகிழ்ச்சி.

லதா - ஜீவா உன் சித்திக்கு சொன்னியா?? அக்கா வரான்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா...ஏங்க நாளைக்கு நம்ம மாரியண்ண ஆட்டு பண்ணைக்கு போய் ரெண்டு ஆடு இல்லை இல்லை மூணு ஆடு நல்ல எலசா பாத்து வேல பேசிட்டு வாங்க. ரோஜாவுக்கு கறின்னா ரொம்ப உசுரு

யாழி - மா அத்தைக்கு கறின்னா உசுரு தான் அதுக்காக அதையே சமைச்சு போட்டு அவங்க உசுர வாங்கிறாத என்று கிண்டலிடிக்க லதா அவரை முறைக்க என அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இனியும் அவன் எதிரில் தான் அமர்ந்திருந்தாள் மறந்தும் கூட தன்னவனின் பார்வை தன்மீது பதியவில்லை என்பதை உணர்ந்தவளுக்கு மனம் வலிக்க தான் செய்தது. இன்னும் சிறிது நேரம் இங்கிருந்தோம் எங்கே அவன் மார்பில் புதைந்து அழுது கரைந்துவிடுவோமா என்று பயந்தவள் ஏதோ வேலை செய்பவள் போல சமயலறைக்குள் சென்று புகுந்துக்கொண்டாள். ஜீவா இதை கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை அனைவரும் அமர்ந்த பேசிக்கொண்டிருக்க சூர்யா இனியின் பின்னே சென்றான்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now