ரகசியமாய் புன்னகையித்தால் 8❤️‍🔥

687 18 2
                                    

புன்னகை 8



எனக்கு நிச்சயம் பண்ண பொண்ண நா பாக்க வந்திருக்கேன் என்று அவன் பின்னால் நின்றிருந்த இதழினியை அவள் கரம் கோர்த்து தன்னுடன் சேர்த்து நிறுத்தினான் மதிமாறன்

இனிக்கு இத்தனை நாள் கழித்து தன் உயிறானவன் தன் முன் நின்றிருந்தும் அவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். ஓடிச்சென்று அவனிடம் அடைக்கலம் புக துடித்த மனதை மிகவும் சிரமப்பட்டு அடக்கினாள். மனதிற்குள்ளே அவனிடம் லட்சம் மன்னிப்புகளை வேண்டி தலை குனிந்து நின்றிருக்க ஜீவாவின் பார்வை தண்ணவளை தான் துளைத்துகொண்டு இருந்தது. நடந்த அனைத்தையும் மறந்து அவளை பார்க்க ஆசையுடன் நின்றிருந்தவனுக்கு அவள் இவ்வாறு வேறு ஒருவனுடன் கரம் கோர்த்து நின்றிருப்பதை பார்க்க இதயமே வெடித்துவிடும் போல் ஒரு வலி. எத்தனை முறை ஆசையாக அவள் கரம் கோர்த்து கதைகளும் அவன் கனவுகளையும் அவளுடன் பகிர்ந்திருப்பான் ஆனால் இன்று அவனுக்கு சொந்தமான கரம் வேறொருவன் கைக்குள் சிக்குண்டு கிடப்பதை பார்த்தவனின் இதயம் குருதியை சிந்தியது

ஜீவா கொஞ்சம் வழி விடுறியா இதழ் ரொம்ப டயர்டா இருக்கா, ரெஸ்ட் எடுக்கனும் என்று ஜீவாவை தாண்டி அவளை அழைத்துகொண்டு உள்ளே நுழைந்தான்.

இதழ் நீ போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா நா உனக்கு குடிக்க எதாவது கொண்டு வறேன் என்க பரிதியும் யாழியும் பேச்சு சத்தம் கேட்டு சமயலறையில் இருந்து வெளியில் வந்தனர். இனியால் எதுவும் பேச முடியவில்லை நிமிர்ந்து அவளின் வேலுவை பார்க்க ஜீவா கதவின் அருகிலேயே அசையாமல் முதுகு காட்டி நின்றிருந்தான். அவன் நின்றிருந்த கோலமே சொன்னது அவன் மனம் படும் வேதனையை அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு அவன் வலி நிறைந்த மனதிற்கு ஆறுதலாக இருக்க தோன்றியது. ஆனால் அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது அதனை செயலுக்கு கொண்டு வர தடையாய் எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்க மாறன் நக்கலாய் இவளை பார்த்து சிரிக்க எதுவும் செய்ய இயலாதவளாய் இதழ் நின்றிருந்தாள்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now