ரகசியமாய் புன்னகையித்தால் 43❤️‍🔥

465 15 2
                                    

புன்னகை 43

உணவு பொட்டலத்தை பத்ரிக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு கதவை தாழிட்டு சென்றனர் வெற்றியும் ஜீவாவும்.

கால்கள் காட்டபட்டு இருந்ததால் பத்ரியினால் எழுந்து நிற்க முடியவில்லை. அப்படியே மெதுவாக தனது உடலை அசைத்து அசைத்து உணவு பொட்டலத்தை நெருங்கும் வேலையில் சரியாக கதவை திறந்து உணவினை எடுத்துக்கொண்டான் ஜீவா.

தன் முயற்சி வீனானதை நினைத்து கோபமுற்ற பத்ரி சத்தமிட, ஜீவா அலட்டிக்கொள்ளாமல் நா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு சூர்யாவை எங்க வெச்சிருக்கீங்க என்றான்.

ஏற்கனவே காலையில் இருந்து சாப்பிடாதது இப்போது உருண்டு பிரண்டு உணவு பொட்டலத்தை எடுக்க வந்தது என சோர்வாய் இருந்தவன் இதற்குமேல் தாக்கு பிடிக்க என்று உண்மையை கூற ஆரம்பித்தான்.

நீங்க எல்லாரும் நெனச்சிட்டு இருக்கிற மாதிரி அந்த பையன் சாகள உயிரியோட தான் இருக்கான். அன்னைக்கு அப்பாவையும் அம்மாவையும் தூக்க சொல்லியிருந்த அந்த ஆக்சிடண்ட் திட்டம் சொதப்பிருச்சுன்னா உங்கள தீத்து கட்ட அண்ணே உன் வீட்ல ஆளுங்களை இறக்கி இருந்தாரு.

ஆனா முதல்ல போட்ட திட்டத்துலையே உன் அம்மாவும் அப்பாவும் சீரியஸா இருந்தாங்க அதுனால அண்ணே அண்ணி என்று பத்ரி இதழினியை குறிப்பிட பின்னர் ஜீவா அவனை முறைக்கவும் அந்த பொண்ணு என்று மாற்றினான். அந்த பொண்ணு வீட்ல இருந்து கிளம்பிட்டோம் . உன் வீட்ல இருந்த எங்க ஆளுங்களுக்கு நாங்க தகவல் சொல்லாதனால அந்த பையன் அங்க நுழஞ்சதும் உன் வீட்டு ஆளுங்கன்னு நினைச்சு கொளுத்தி போட்டானுங்க .

ஆனா ஒரு சின்ன பையன் நுழையுறதை பாத்த எங்க ஆளுங்க அவனை பிடிச்சு தூர தள்ளி விட அவன் தூர போயி விழுந்துட்டான் ஆனா அவனை காப்பாத்த போன எங்க ஆளு செத்துட்டான்.

அந்த பையனை அங்கேயே விட்டுட்டு வராம எங்க ஆளுங்க மூஞ்சிங்கள அவன் பாதிட்டதால அவனை தூக்கிட்டு வந்துட்டனுங்க. எங்க ஆளு ஒருத்தன் செத்தது நடுல நீ வந்து அண்ணனை அடுச்சதுன்னு இந்த பிரச்சனையினால எங்க ஆளுங்க அவனை தூக்கிட்டு வந்ததையே எங்க கிட்ட சொல்லல.

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin