ரகசியமாய் புன்னகையித்தால் 47❤️‍🔥

496 16 1
                                    

புன்னகை 47

ஜீவா ஆஸ்திரேலியா சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அனைவரும் எதிர்பார்த்தத்திற்கு நேர் மாறாக இனியின் நடவடிக்கை இருந்தது.

சோகமே உருவாய் யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டிருப்பாள் என்று நினைத்திருக்க இனியோ மகிழ்ச்சியாக சுற்றி வந்துக்கொண்டு  இருந்தாள். மூன்று வேலையும் விதவிதமாய் சமைப்பது , பரிதியையும் யாழியையும் வம்பிழுப்பது , கோபாலனுடனும் மலருடனும் அமர்ந்து கதை பேசுவது, ஜீவித்தாவுடன் விளையாடுவது என்று மகிழ்ச்சியுடன் சுற்றி வந்தவளை பார்க்க அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

இப்போதும் ஜீவித்தாவுடன் விளையாடிக்கொண்டிருப்பவளை காயத்ரியும் வெற்றியும் அதிசயமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.

காயத்ரி - மாமா ஒருவேலை ஜீவா அண்ணே இவளை வேண்டாம்னு சொன்னதால பைத்தியம் ஆகிட்டாளோ என்று வெற்றியிடம் ரகசியமாய் கேட்க

வெற்றி - வாய்ப்பே இல்ல. என் தங்கச்சி மத்தவங்களை தான் பைத்தியம் ஆக்குவா அவ நல்லா தெளிவா தான் இருப்பா

காயத்ரி - பின்ன எப்புடி மாமா எதுவுமே நடக்காத மாதிரி இருக்கா

வெற்றி - அதெல்லாம் எதாவது யோசிச்சு வெச்சிருக்கும். ஒன்னும் இல்லாத உன் மூளையை கசக்கி யோசிச்சு கஷ்ட படாத என்று மனைவியை கலாய்க்க

அவனை முறைத்தவள் அவன் தலையில் கொட்ட "அம்மா எதுக்கு எப்போ பாத்தாலும் அப்பாவை அடுச்சுட்டே இருக்க " என்று அவள் மகள் கேள்வி கேட்க

இனி சிரித்து விட்டாள். "அப்போ அண்ணே தினமும் அண்ணி கைல அடி வாங்குறதே பொழப்பா வெச்சிருக்கியா" என்று அவன் மகளுடன் கூட்டு சேர்ந்து சிரிக்க

காயத்ரி - என் கையாள அடி வாங்கலன்னா உன் அண்ணனுக்கு அந்த நாளே போகாது. இனி அவரை விடு, உன் சங்கதி என்ன என்று ஆர்வமாய் கேட்க

இனி - என் சங்கதி உங்களுக்கு தெரியாததா அண்ணி புதுசா என்னமோ கேக்குறீங்க

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now