ரகசியமாய் புன்னகையித்தால் 21❤️‍🔥

422 14 1
                                    

புன்னகை 21

சுமதி மகனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருக்க தாயின் கைவண்ணத்தில் சமைத்திருந்தவற்றை பாரபட்சமின்றி ருசித்துக்கொண்டிருந்தான் மாறன். முகிலரசன் மகனையே ஆராய்ந்தபடி இருக்க சுமதிக்கு கோவம் வந்துவிட்டது

சுமதி - ஏங்க நீங்களே பையன் சாப்பிடுறதை கண்ணு வெப்பீங்க போல அமைதியா உங்க தட்டை பாத்து சாப்பிடுங்க என்றவரை முகிலரசன் முறைத்துவிட்டு சாப்பிட்டு வந்து அவர் அலுவலக அறையில் அமர்ந்தார்

எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவனுக்கு தெரியும் அவன் தந்தையின் அடுத்த செயலை பற்றி

முகிலரசன் பத்ரிக்கு போன் செய்து அழைக்க அடுத்த 5 நிமிடத்தில் அவர் முன் வந்து நின்றான்

முகிலரசன் - என்ன டா நடக்குது

பத்ரிக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழிக்க "எனக்கு தெரியாம நீயும் அவனும் ஏதேதோ பண்ணுற மாதிரி இருக்கு " என்றதும் புரிந்துவிட்டது பத்ரிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சொரிந்து நின்றவனை காப்பாற்ற வந்துவிட்டான் காரணகர்த்தா

மாறன் - அப்பா எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா கேளுங்க எதுக்கு அவனை பயமுறுத்துறீங்க

முகிலரசன் - சரி டா நேரடியா உன்கிட்டையே கேக்குறேன் இன்னைக்கு நடந்ததுக்கு என்ன பதில் சொல்ல போற

மாறன் - ஒன்னும் சொல்ல போறது இல்ல என்றதும் முகிலரசன் அவனை முறைக்க "அப்பா நேரம் வரும்போது நானே உங்ககிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லுறேன் இப்போதைக்கு கவலைய விடுங்க" என்று கூறியவனை அவரால் முறைக்க மட்டுமே முடிந்தது. மகனின் செயலை, அவர் நினைத்தால் ஆள் வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம் ஆனால் மகனின் மேல் இருந்த நம்பிக்கை அவரை அவ்வாறு செய்ய விடவில்லை என்னமோ பண்ணுங்க என்று சென்றுவிட்டார்

பத்ரி - என்ன அண்ணே ஆச்சு

மாறன் அன்று அவன் தேவதையை பார்க்க சென்றது முதல் இன்று ஜீவா உள்ளிட்டோர் அலுவலகம் வந்தது வரை கூறினான்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now