ரகசியமாய் புன்னகையித்தால் 37❤️‍🔥

450 15 2
                                    


புன்னகை 37

வீட்டில் நடந்தவைகளை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த கோபாலன் ஜீவா வெளியேறியதும் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

------

இரத்த வெள்ளத்தில் கீழே பேச்சு மூச்சு அற்று கிடந்த தன் மகனை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டார் சுமதி

மாறா!! மாறா என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவன் கன்னத்தை தட்ட அவனிடம் அசைவுஇல்லை மீண்டும் அவனை தரையில் மெதுவாக படுக்க வைத்துவிட்டு வேகமாக தனதரைக்கு வந்தவர் பத்ரிக்கு அழைத்து மாறன் கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டதாக கூறினார் . அடுத்த 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தான் பத்ரி.

மாறனின் நிலையை பார்த்து கண்கள் கலங்கியவன் வேகமாக அவனை தோளில் தூக்கி போட்டுகொண்டு மருத்துவமனை விரைந்தனர். மாறனுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்க பத்ரி முகிலரசனுக்கு அழைத்து விஷயத்தை கூற அவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தார்.

முகிலரசனால் மகனின் நிலைக்கு சுமதி கூறிய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்ரியை அழைத்து வீட்டின் சிசிடிவி புட்டேஜ் எடுத்து பார்க்க சொல்ல பத்ரி சிசிடிவியை பார்த்துவிட்டு ஜீவா வீட்டிற்கு வந்து சென்றிருப்பதாக கூற முகிலரசன் மனைவியை ஓங்கி அறைந்தார்

ஏண்டி அவன் வீட்டுக்கு வந்து நம்ம புள்ளைய அடிச்சி போட்டு போயிருக்கான் நீ கீழ விழுந்துட்டான்னு் கத அலந்திட்டு இருக்கியா என்று கத்த

ஆமாங்க அவன் தான் வந்து நம்ம புள்ளைய அடுச்சான், செஞ்ச பாவதுக்கெல்லாம் கொஞ்சம்அ ஆச்சும் அனுபவிக்க வேணாமா என்று கண்களில் கோவத்தை தேக்கி கேட்க

மனைவியை எரித்துவிடும் பார்வை பார்த்தார் முகிலரசன்

------------

ஜீவாவிடம் சண்டையிட்டு வந்து அறையில் அடைந்தவளை அவள் கதவு திறக்கும் வரை விடாமல் தட்டிக்கொண்டிருந்தான் பரிதி. கதவை திறக்காமல் இருந்தால் அவன்  தட்டுவதை நிறுத்தப்போவதில்லை என்று உணர்ந்தவள் கதவை திறக்க , திறந்த மறுநொடி ஜீவா அறைந்த மறுகன்னத்தில் அறைந்திருந்தான் பரிதி .

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now