அத்தியாயம் - 11

306 18 0
                                    

மிகவும் பரவசமான உற்சாகமான இசை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. மெலிதான இசையில் ஒளித்துக்கொண்டிருந்த அந்த பாடலுக்கு அழகாக நடனமாடிக்கொண்டிருந்தார் அபிநந்தன். பிரபலமாக அனைவராலும் அழைக்கப்படும் அபி மாஸ்டர்.

கட்டுக்கோப்பான உடல், தேஜஸான முகம், உதட்டை பிரியாமல் ஒட்டியிருக்கும் புன்னகை. முழுக்கை டீஷர்ட் மடக்கி விடப்பட்டு இருக்க, வீட்டில் அணியும் ஒரு இலகுவான ஷார்ட்ஸ் அணிந்திருந்தவர், இசைக்கேற்ப நடனம் ஆடிக்கொண்டிருந்தார், தனது பதினாறு வயது மகள் அக்னியுடன். அவரை அக்னிக்கு தந்தை என்று சூடம் அடித்து சத்தியம் செய்து சொன்னாலும் நம்பாத வகையிலான இளமையான தோற்றம் அவருக்கு.

நேரம் செல்ல செல்ல பாடலுள் மூழ்கியவர்கள் தங்களையும் மறந்து இருவரும் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தனர். அபி ஒருபக்கம் ஆட, அக்னி மறுபக்கம் ஆட, இவர்களை ஆவென பார்த்துக்கொண்டிருந்தான் அக்னியின் தம்பி அனந்த். எட்டாம் வகுப்பு படிக்கும் குறும்புக்காரன்.

தன் தந்தையையும், தமக்கையும் போட்டி போட்டு ஆடுவதை, கையில் வைத்திருந்த கேமராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிற்க, தகப்பனும் மகளும், தொப்பென்று சோபாவில் அமர்ந்தனர்.

"அனந்த் குட்டி சொல்லுடா! அக்கா ஆடுனது பெஸ்டா இல்ல அப்பாவா?", ஆடிக்களைத்ததில் அக்னி வேக மூச்சுகளை வெளியிட்டபடியே, அவனது கொழுகொழு கன்னம் பற்றி கேட்டாள். அனந்த் ஒருநொடி தந்தையை கண்டான். அவரோ அவனது பதிலை எதிர்பார்த்து அவன் முகம் நோக்கினார்.

வேகமாக தமக்கையின் கன்னத்தில் முத்தம் வைத்து, "யூ ஆர் டான்சிங் சோ பியூட்டிபுல் அகி அக்கா. ஆனா, அப்பா தான் அழகா ஆடுனாரு. நீயும் தினமும் அப்பாகூட போட்டி போடுற. இன்னமும் அப்பாவுக்கு சமமா நீ வரல. கண்டிப்பா ஒரு நாள் நீ ஜெயிப்ப!", அவளது தாடை பிடித்து, அவளை குறை கூறினாலும் வருந்தாத வகையில் கூறி தாஜா செய்தான் வாண்டு பையன். அபிநந்தன் சத்தமாக சிரித்தார்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now