அத்தியாயம் - 70

268 17 0
                                    

ஒரு மாதம் கடந்திருந்தது...

பூட்டப்பட்ட அக்னிமித்ரனது வீட்டை ஒருநொடி எதார்த்தமாக பார்த்துவிட்டு மீண்டது அவ்வழியே அனோகியோடு அலுவலகம் சென்றுக்கொண்டிருந்த அக்னியின் விழிகள்.

அனோகியும் அதை கவனித்தாலும், சில விஷயங்கள் மாறுவதில்லை, நாம் தான் மாற்ற வேண்டும், அக்னி நடப்பை அவளாகவே ஏற்றுக்கொள்ள நேரம் எடுக்கும் என அமைதியாகினாள்.

"இன்னும் எத்தன நாள் இப்டியே இருக்கப்போற?", அனோகியின் வழக்கமான அதே கேள்வி.

அக்னியிடம் பதில் இல்லை. இன்று மட்டுமல்ல, கடந்த ஒருமாதமும் இதே தான். அனோகிக்கு அக்னியை ஒருமாதம் முன்பு சாணக்கியன் அவளை விட்டு சென்றபோது இருந்த கருப்பு நொடிகள் கண்முன் விரிர்தது.

ஒருபுறம் மருத்துவர்கள் கைவிரிக்க, மறுபுறம் சாணக்கியனும் போய்விட்டான்.

"நோ!!!", என்றவளது ராட்சச கத்தல், அங்கிருந்த அனைவரது இதயத்தையும் உலுக்கியிருக்கும்.

"எப்டி இது நடக்கலாம்? என்னவிட்டு எப்டி அவன் போகலாம்! ஏன்டா என்ன அழ வைக்கிற? நோ நோ நோ... அப்டிலாம் இல்ல... அவன் போயிருக்கமாட்டான். அவன் என்கூட கண்ணாமூச்சு ஆட்டம் ஆடுறானா? ஹேய் அனு என் சாணக்கியன் வர சொல்லு. நான் அவன பாக்கனும்.", பைத்தியம் போல் பிதற்றினாள். உண்மையில் அவளது மனம் பித்தாக தான் இருந்தது அவளது சாணக்கியன் மீது.

"அக்னி ரிலாக்ஸ்...", அனோகியை அடுத்த வார்த்தை பேச அவகாசம் கொடுக்காமல், "ஐ கான்ட் அனு.", என்று கத்தியவள், "அவன் என்னவிட்டு போயிருக்கூடாது, என்ன விட்டுபோயட்டானே! அவன் இப்டி போக கூடாது... எனக்கு வலிக்கிது அனு... என்னால முடியல... அவன் இல்லாம எப்டி வாழ்வேன்... என்ன வலிக்க வலிக்கி கொன்னுட்டான், எனக்கு நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன் தெரியல... ஆஆஆஆஆ.....", என ஆக்ரோஷமாகியவள், ஆவேசமாக அங்கிருந்த அனைத்தையும் தனது பலம் மொத்தம் கொண்டு கண்ணாடி உடைத்து, திரை சீலைக்கிழித்து, மேஜைகளை நொறுக்கி துவம்சம் செய்து, அவ்விடத்தையே களோபரம் செய்துவிட்டாள். அவளை தடுக்க தோற்றுப்போனவளாக நின்றாள் அனோகி.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now