அத்தியாயம் - 66

247 12 0
                                    


தியாகராஜனை கண்டு புன்னகைத்த ராம், "கண்டிப்பா என்னோட ஆபீஸ்க்கு நீங்க வரணும் சார்!", என்றிட, "உன்ன இதுவர ரொம்ப மட்டம் தட்டிருக்கேன்டா. அதுக்கு பேரு பொறாமைன்னு கூட சொல்லலாம். எனக்கு இந்த வயசுல இருக்குற திறமை, உனக்கு இந்த சின்ன வயசுலேயே இருக்குறது ஆச்சரியமும் பொறாமையும் ஒருசேர தருது. ஆனா நீ வெற்றியடைஞ்சு உனக்கான அடையாளத்தோடு சந்தோஷமா இருக்கனும்.", என்று அவனது தோளில் தட்டினார்.

"இப்டியே எப்பவுமே இருங்க சார். இந்த ஸ்ட்ரேயிட் பார்வார்ட் பேச்சை விடாதீங்க. மனசுல இருக்கிறத பேசவும் ஒரு தில்லு வேணும்.", என்றவன் புன்னகைக்க, அவர் அமர்த்தலாக ஒரு சிரிப்பு சிரித்தார்.

இன்னும் ஒரு வாரத்தில் புதிதாய் அவனுக்கே அவனுக்கான ஒரு அலுவலகத்தை தொடங்க உள்ளான் ராம். கிட்டதட்ட அக்னி சொல்லியது போல் அவனது வாழ்க்கையில் இது முதல் வெற்றியே!

சரியாக ஒருவாரம் கழித்து, தியாகு, ராம், விநாயகம், மீரா, ஊர்வசி என அனைவரது முன்னிலையிலும் தனது அலுவலகத்தை தொடங்கியிருந்தான். முதல் ஒருமாதமும் எளிதில் கேஸ் ஒன்று பெரிதாக வரவில்லை. அவன் பேசி வெற்றிப்பெற்றது ஒருசில கேஸ் என்றாலும், சாணக்கியன் கொஞ்சம் பிரபலமாகியிருந்தான். ஆனால் இது போதாது என்பது அவனுக்குமே தெரியும்.

இவ்வாறே ஒருசில வாரங்கள் கடக்க, அன்று பெரிய அளவிலாக கேஸ் ராம் வசம் வந்தது. அதற்காக ராபகலாக மெனக்கடல் செய்தவன், அன்று கோர்ட்டிற்கு சென்று வாதிட்டான். ஆனால் தர்மசங்கடமான ஒருநிலை எதிர் தரப்பின் வக்கீலாக தியாகராஜன்.

இருவருமே ஒரு அழுத்தமான பார்வையோடு அவரவர் தரப்பிற்கு வாதிடத்தொடங்க, கோர்ட்டே ஏதோ நெருப்பின் பிடியில் அனலடித்தது. அத்தனை காரசாரமாக பேசினர் இருவரும். தீர்ப்பிற்காக காத்திருந்தனர். மிதய உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு ராம் தரப்பிற்கு சாதகமாகியது. ராம் வெளியே வந்ததும் தியாகுவை தான் முதலில் கட்டிக்கொண்டான்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now