அத்தியாயம் - 68

232 16 2
                                    

சாணக்கியன் தன்னிடம் இருப்பதாக கூறிய அஜய், அவளிடம் 'உன் சந்திச்சப்போ உன்கிட்ட நான் முதல பேசின வார்த்தை தான் க்ளூ' என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க, அக்னிக்கு சாணக்கியன் நினைவில் துவண்டுப்போய் எல்லா சாலைகளையும் சுற்றிக்கொண்டிருந்தாள் பழையவற்றை நினைத்தபடி.

மறுபுறம் ரத்தவெள்ளத்தில் கட்டப்பட்டிருந்த சாணக்கியன், தனது கடந்த காலத்தை எண்ணியபடி அடியின் வலியில் மயங்கியிருந்தான்.

'னக்கு நீ வேணும். உன் படிப்பு, எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாத்துக்கும் நான் பொறுப்பு... உன்னோட வீட்ட விட்டு வந்திடு. என்னோட கெஸ்ட் ஹவுஸ் மகாராணி நீதான் டார்லிங்.", என்று கோணல் சிரிப்போடு அஜய் கூறியது சட்டென நினைவுக்கு வர அக்னியின் கார் சடன் ப்ரெக் அடித்து நின்றது.

"ச்சே! இன்னும் அவன் இத மனசுல வச்சிட்டு தான் பேசுறானா? இவனுக்கு நான் என்ன பண்ணேன். ஏன் என் அப்பாவ, என் மித்துவ எல்லாத்தையும் என்கிட்ட பறிச்சான்?", என தலையை பிடித்துக்கொண்டு ஸ்டேயரிங் மேல் சாய்ந்துக்கொள்ள, அவளது அலலப்பேசி சிணுங்கியது. அதே எண், அஜய்.

"....."

"என்ன அக்னி? இந்நேரம் பதில கண்டுப்பிடிச்சிருக்கனுமே! லேட் பண்ணாதம்மா, உன் புருஷன் உயிர் என் கையில தான் இருக்கு.", என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவனது வீட்டு வாசற்படியே மிதிக்க யோசிப்பவளை, கெஸ்ட் ஹவுஸ் அழைக்கிறான்! இதைவிட தன்னை இழிவுப்படுத்த முடியுமா? இதற்கு இவன் பதில் சொல்லியே தீரவேண்டும் என எண்ணிக்கொண்டவள் கண்முன் சாணக்கியன் முகம் தோன்றியது. ஒரு பெருமூச்சுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தவளுக்கு அப்போது தான் விளங்கியது, அவனது கெஸ்ட் ஹவுஸ் எங்கே இருக்கும் என்று தெரியவில்லை என்று.

ச்சே! என சலித்துக்கொண்டவள் வெறுப்போடு அவ்வெண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு பல முறைக்கு பிறகு ஏற்கப்பட, "என்ன?", அஜய் அதிகாரமாக கேட்க, அவளுக்கு எரிச்சலாகியது

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now