அத்தியாயம் - 62

223 15 0
                                    

கல்லூரி போட்டி முடிவடைந்து ஒரு வாரம் கடந்திருக்க, அந்த ஆளில்லா சாலையில், நேருக்கு நேர் நூல் இடையில் மோதிடும் வேகத்தில் நின்றது ராமின் சைக்கிளும், அனந்தின் சைக்கிளும்.

ராம் முறைப்போடு, "கண்ண தலைக்கு பின்னாடி வச்சிட்டு வருவியாடா?", என அக்கறையும் கண்டிப்புமாக கேட்க, அனந்த் அசடு வழிய இளித்தவன், அவனை ஒரு ஆச்சரிய பார்வையோடு பார்த்து, "மச்சி! பின்னாடி கிரிக்கெட் பேட் தானே?", என கேட்டதுமு, ராம் ஆமென்றான்.

"சூப்பர் மச்சி நீங்க! டார்ஸ் ஆடுறீங்க, பாடுறீங்க, விளையாடுறீங்க...!!! கடவுளோட மொத்த திறமையும் உங்ககிட்ட இறங்கிட்டாரு", என ஆலங்கட்டி மழைக்கே போட்டியாக ஐஸ் வைத்தான்.

அவனை கூர்ந்து கவனித்தவன், "என்ன மச்சி கேக்க வர்ற?", என சரியாக கேட்டதும், அனந்த் இளித்து பின் சோகமாகினான்.

இருவரது சைக்கிளும் ஒரு ஓரமாக நிற்க, ஒரு திண்டில் அமர்ந்திருந்தனர் இவர்கள்.

"எனக்கு ஸ்கூல் கிரிக்கெட் கோச்சிங் இதெல்லாம் போகும் மச்சி. ஆனா என் கிளாஸ் பசங்க, என் ப்ரெண்ட்ஸ் யாரும் விளையாடமாட்டாங்க, அவங்க வீடெல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். எங்கப்பா எங்க விருப்பத்த புரிஞ்சிக்கிட்டதால, நான் கிரிக்கெட் விளையாடுறதுல அவருக்கு சந்தோஷம் தான். ஆனா என்னோட கிரிக்கெட் பத்தின உணர்வ, அவரோட வேலை பிஸியால சொல்லமாட்டேன், இருக்குற கொஞ்ச நேரத்துல அவரோட சிரிப்பா சந்தோஷமா இருக்கனும்னு தோணும்.

அகி அக்காவுக்கு கிரிக்கெட் பத்தி புரியாது. நீ என் ப்ரெண்ட் தானே! நானும் இனிமே உன்னோட சேர்ந்துக்கலாமா உன்கிட்ட ஷேர் பண்ணிக்கலாமா? இல்ல சின்ன பையன்னு ஒதுக்கிடுவியா?", என்றிட, ராம் அவனின் பேச்சில் அவனது ஏக்கத்தின் வெளிப்பாட்டை உணர்ந்து, அதுவும் உரிமையோடு அவன் கேட்டதில் நெஞ்சம் நெகிழ்ந்தவனாக, "சியூர் மச்சி!", என ஹை-பை அடிக்க கை உயர்த்த, அனந்த்தும் பதிலுக்கு ஹை-பை கொடுத்தான்.

இருவருமே மைதானம் சென்றனர். அங்கு தன் நண்பர்களுக்கு அனந்த்தை சொந்தமென அறிமுகம் செய்தவன், தங்களுக்குள் அவனை இணைத்திருந்தான். ஆனால் உண்மையிலே அனந்த் விளையாட்டு  கண்டு அனைவருமே வாயை பிளக்க, பெருமையாக அவனை பார்த்தன ராமின் விழிகள்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now