அத்தியாயம் - 39

237 16 2
                                    


மாணவர்களும், ஆசிரியர்களும், போட்டியாளர்களும் என திருவிழா போல் காட்சியளித்தது அந்த அரங்கம்.
இதே போன்றதொரு நாளில் தான் தனது கனவான நடன காதலனை நோக்கி முதல் படியினை எடுத்து வைத்தாள் அக்னி. அதன் சந்தோஷத்தை கொண்டாடும் முன்பே அபியின் மறைவில், நடனமாடாமல் நடமாடிக்கொண்டிருக்கிறாள்.

எல்லாவற்றையும் நினைத்து பார்த்தான் அக்னிமித்ரன். இன்று தன் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினர்களில் ஒருவனாக அவன் வந்திருக்கிறான். ராம்குமாருக்கு அவனது பாக்சிங் கனவு பற்றியும், தற்போது அவன் வெற்றி பற்றியும் தெரியும் என்பதால், மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அவனை வர சொன்னார்.

அன்று இதை அவனிடம் கூறிய போது மித்ரன் சிரித்துவிட்டான், "சார்! நான் காலேஜ்ல ரவுடி மாதிரி அடாவடித்தனம் செஞ்சதெல்லாம் உங்களுக்கு தெரியாததா? என்னப்போய் பசங்களுக்கு எக்சாம்பிளா வர சொல்றீங்க? எனக்கு என் ப்ளாஷ் பேக்லாம் மண்டையில ஓடுது. கண்டிப்பா நான் வரமாட்டேன் சார்.", என்று பிடிவாதமாக கூறினான்.

"டேய் மித்ரன்! அதெல்லாம் பழைய கதைடா. இப்போ நம்ம ஊருக்கே பெருமை சேர்த்திருக்க, உன்ன சிறப்பு விருந்தினராக்கி கொண்டாட வேண்டியது, உன்னோட ஒரு நலன்விரும்பிய என்னோட ஆசை.", என்றார் மனமார.

"ம்க்கும்! இதெல்லாம் சஸ்பண்ட் பண்ணப்போ தெரியலையாக்கும்!", வேண்டுமென்றே அவரை வம்பிழுத்தான்.

"டேய்!", என அவர் முறைப்போடு நிறுத்த, அவன் சிரித்துவிட்டு, வருகிறேன் என உறுதியளித்தான். இதோ இன்று சிறப்பு விருந்தினராக, கம்பீரமாக இன்னும் சில சிறப்பு விருந்தினர்களோடு முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுக்கொண்டிருக்கிறான்.

அடுத்து பாடப்போவது அக்னி தான். இதுவரை அவள் பாடி அவன் கேட்டதில்லை. அக்னியின் குரலொலியே அவனுக்கு இன்னிசை தான், பாடினால்(ள்) அவள் குரலொலியிலே கரைந்து, அதிலே கலந்திடுவான் போல!

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now