அத்தியாயம் - 61

220 17 0
                                    

மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் நிறைந்திருந்தது அரங்கம். பல கல்லூரி மாணவர்களும், அவர்ளுடன் ஆசிரியர்களும் அமர்ந்திருந்தனர். திருவிழா போல் காட்சியளித்தது அவ்விடம். காளையர்கள், கன்னியர்கள் அனைவரும் தங்களது நட்புகளோடு வலம் வந்தபடி, ஆங்காங்கே இருந்தனர்.

அக்னிமித்ரன் சீனியர் என்பதால், சில பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்க, அதனால் அவன் ஓயாது அங்குமிங்கும் நடந்துக்கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பையும், எதாவது தேவையோ, பிரச்சனையோ வராமல் பார்த்தபடி இருந்தான்.

மறுபுறம் தனது கனவின் பிரதிபலிப்பை காண தன் தந்தை மற்றும் அனந்த் இருவரோடு கூட்டத்தில் அமர்ந்திருந்தாள் அக்னி. தந்தையின் கைகளை இறுகப்பற்றியிருந்தது அவளது தளிர் விரல்கள்.

அடுத்து இதோ அக்னி பயிற்சியாளராக இருந்து, கற்றுக்கொடுத்த முப்பது மாணவர்களும் மேடை ஏறினர். அவர்களது ஆடை அலங்காரமும், அத்தோடு propertyயாக ஃபேக் ப்பிலேம் என்பதை உபயகப்படுத்தியிருந்தனர்.

உண்மையான வாயு தீப்பிழம்பு போல ஒரு மாயையை உருவாக்குமே தவிர மற்றபடி இது முற்றிலும் எரியக்கூடிய பொருளில்லை! இதனால் ஆபத்து எதுவும் இல்லாததோடு மட்டுமில்லாமல் மிகவும் யதார்த்தமான செயற்கைச் சுடரை போன்றிருப்பதால், அக்னி இதை Propertyயாக கொடுத்துவிட்டாள்.

மேடை முழுவதும் மிதமான வெளிச்சத்தில் மங்கியிருந்தது. மாணவர்கள் ஃபேக் ப்பிலேம் ஏந்திக்கொண்டு வந்து நிற்க, அதுவே அனைவரையும் அவர்களை கவனிக்க வைத்தது. அபிநந்தன் கண்கள் கூட ஆச்சரியமாக அவர்களது செயலை நோக்கியது.

"ஹார்ட்ஸ் ஆன் பயர்" எனும் ஆங்கிலப்பாடலும், "தனியே தனந்தனியே", தமிழ் பாடலும் சேர்ந்த fusion பாடலாக மாற்றியிருந்தாள் அக்னி, கீர்த்தி மற்றும் மகேஷ் உதவியுடன்.

அரங்கமே அதிரும் வகையிலும் அதே நேரம் இதமான ஒரு உணர்வை தரும் வகையிலும் அவர்களது நடனம் இருந்தது.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now