அத்தியாயம் - 59

244 16 2
                                    

அன்றும் பொழுது சாய்ந்த வேளையில், அக்னியை காண அவள் வீடு உள்ள தெரு முனையிலிருக்கும் சிவன் கோவிலில் அமர்ந்திருந்தவன், சிறிது நேரம் கழித்து அவளை வீட்டை நோக்கி நடையை கட்டியவனுக்கு சரியாக கண்ணில் பட்டாள் அக்னி.

சற்று முன்பு தான் அவளது வீட்டில் உள்ளே செடி மத்தியில் ஒரு கவிதை வைத்திருந்தான். அத்தோடு காலையில் அவன் தந்த கவிதையும், ஒரு கோப்பையும் அங்கிருக்க, குழம்பியவனாக திரும்பி வந்தவனிற்கு தெரியவில்லை... இதற்கிடையே மித்ரனுக்கும் அக்னிக்கும் நடந்த பேச்சு வார்த்தை பற்றி.

கதவை தாண்டி வெளியே வந்தவள் அங்கு செடிகளுக்கு பின் மறைத்து வைக்கப்பட்ட கப் மற்றும் தாள் இரண்டையும் எடுக்க, அத்தோடு வேறு ஒரு தாளும் இருந்தது. அதை வைத்தது யாரென்று அவளுக்கு தெரியாதா?!!! மித்ரன் என்றே நினைத்தாள்.

"இவன!!!", என்று பல்லைக்கடித்தவள், கோபமாக நிமிர்ந்து எதிர்வீட்டு பால்கனியை கண்டாள். அவன் அங்கு இருந்தால் தானே!

"ச்சே!", என்று கடுப்புடன் அதை தூக்கி வீசிடாமல், பிரித்து படித்தாள்!

"உன் நேரம் எல்லாம் களவாடிக்கொள்ள வரம் கேட்பேன்!
உன் நொடிகளை என் வசமாக்கி...
நானும் இணைந்திட!"

இவ்வாறாக அதில் எழுதியிருக்க, அக்னிக்கு மூக்கு விடைத்தது. 'ஒரு பேப்பரில் கூட பேரு இல்ல!', என காகிதத்தை ஆராய்ந்தாள்.

'இந்த மூஞ்சிக்கு ஒரு பொண்ணே அதிகம், இதுல என்ன வேற காதலிக்கிறானாம். நாளைக்கு ஜெயந்தி ஆண்ட்டிக்கிட்ட போட்டுக்கொடுத்தா தான் அடங்குவான்!', என நினைத்தவள் மறுநொடியே, 'இல்ல அப்பா இல்லாத நேரத்துல இத சொன்னா, நம்மளால எதாவது பிரச்சினை வந்தா சமாளிக்க முடியாது. அப்பாகிட்ட பேசிட்டு பார்த்துக்கலாம்.', என நினைத்து அதை குப்பை தொட்டியில் தூக்ககிப்போட்டாள். கப் தொப்பென்று விழுந்து உடைந்து சிதறியது. காகிதங்கள் கிழிந்து மாய்ந்தது.

கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருந்த ஈர்ப்பும் கூட இப்போது அவன் மீது இல்லை. அக்னிக்கு அவனது செயல் நாகரீகமற்றதாகவே தோன்றியது. ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கிறான், இதில் தன்னிடம் காதல் கவிதைகள் வேறு தருகிறான் என்று மித்ரனையும் அவனது செயலையும் எண்ணி வெகுண்டது மனம்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now