அத்தியாயம் - 47

237 15 4
                                    


வீடு வந்த அக்னியை வரவேற்றது ஒரு பெண்ணின் அழுகை குரலும், அதை தொடர்ந்து ஜெய்ந்தியின் அதட்டும் குரலும் கேட்டது. யோசனையாக உள்ளே வந்தாள் அக்னி.

"அக்னி நீதானாம்மா?", என அந்த பெண் அக்னியை கண்டதும், அழுகையோடே கேட்க, அக்னி யாரிவள் என்று விழித்தாள். பக்கத்திலே அனோகியும், மூர்த்தியும் கடமைக்கென அந்த பெண்ணை பார்த்தபடி சலிப்போடு அமர்ந்திருக்க, ஒரு ஆடவன் நடப்பதை பார்த்தபடி கையை கட்டிக்கொண்டு நின்றிருக்க, ஜெயந்தியோ அதட்டினார்.

"ஏய் வாய மூட்றி! இத்தன நாள் நாங்க செத்தோமா இருக்கோமான்னு கவனிக்காதவ, இப்போ வந்து எல்லாரையும் அதட்டுற, சண்டை போடுற? முதல நீ வெளிய போ!", என்றிட, அக்னி ஜெயந்தியருகே வந்து, "அத்த! ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க! உட்காருங்க.", என்றிட, அந்த ஆடவனும் அப்பெண்ணை அமர வைக்க, அக்னி ஜெயந்தியை அமர வைத்தவள், தானும் அமர்ந்து, அந்த பெண்ணிடம், "எதுவா இருந்தாலும், அமைதியா பேசுங்க, இந்த கத்துற வேலையெல்லாம் வேணாம்!", என கண்டன குரலில் கூறியவள், "யார் நீங்க?", என அந்த பெண்ணிடமும் ஆடவனிடமும் பொதுவாக அக்னி கேட்கவும், அந்த ஆடவன் ஏதோ கூற வர, அதற்குள் மூர்த்தி பதில் தந்தார்.

"நான் பெத்த பொண்ணு தான்மா பேரு அமிர்தம்! அந்த தம்பி அவளோட புருஷன் ராபின். எங்க கிட்ட எதுவுமே சொல்லாம காதலிச்சு, யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கள தலை முழுகிட்டு போய்ட்டா! இப்போ என் நிலையை தெரிஞ்சு தேடி வந்திருக்கா?", என சுருக்கமாக அறிமுகம் செய்தார். அக்னிக்கு, ஜெயந்தி மற்றும் மூர்த்திக்கு ஒரு பெண் உள்ளார், திருமணமாயிற்று என்பதே தெரியும். ஆனால் அது காதல் திருமணம் என்றும், அதன் பின்னர் பேச்சு வார்த்தை இல்லை என்பதெல்லாம் மூர்த்தி கூறியதை வைத்து புரிந்துக்கொண்டாள்.

அப்போது மாடியிலிருந்த அறையிலிருந்து நான்கு வயது மொட்டு மெதுவாக இறங்கி வர, அக்னி எழுந்து வந்து அந்த பஞ்சு பொதியை தூக்கிக்கொண்டாள். அமிர்தத்தின் குழந்தை தான் என தெரிந்தது.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now