அத்தியாயம் - 73

290 17 2
                                    

சாணக்கியன் கூறியதை எல்லாம் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் அக்னி. அவளது மௌனம் அவனுக்கு ஒருவித பதட்டத்தை தந்தது.

"என்ன மன்னிச்சிடு! உன்ன கண்டிப்பா ஹார்ட் பண்ணிருக்கேன் தெரியும். உன்ன மட்டுமில்ல, எல்லாரையுமே. எனக்கு எல்லாமே தாமதமா புரியுது, இல்லைன்னா தாமதமா கிடைக்குது. எல்லாருக்குமான 24 மணிநேரம் தான் எனக்கும், ஆனா அதுல எனக்கான வாழ்க்கையில லேட் ப்ரசஸ் தான் அதிகம்!", என்று அவள் கைப்பிடித்தவன், பெருமூச்சோடு கூறி முடித்தான்.

"என்ன பேசு பேசுன்னு சொல்லிட்டு, நீ அமைதி ஆகிட்ட?", வேண்டுமென்றே சீண்டினான். அவள் முகத்தை மறைத்து தரையை நோக்கி குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

"அக்னி!", அவளது இதயத்தை அவன்ப்பால் இழுத்தது அந்த அழைப்பு. இவ்வாறெல்லாம் அவன் அழைப்பது, அவனது குரலின் மாயம், அது அவளை ஈர்ப்பது என அவளையும் மீறி தோன்றிய ஒரு பரவசத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"எனக்கு ஒரு கனவு வந்துச்சு...", அவன் ஆர்வமாக தொடங்க,

"ம்ம்!"

"அதுல, நான் ஒரு அழகான கார்டன்ல நிக்கிறேன்...", அவன் ரசித்து கூற,

"தோட்டக்காரனா?", என இடையிட்டாள். அவன் செல்லமாக முறைத்து பின் சிரிக்க, அவளும் சிரித்தாள்.

"இதுக்கு மேல கனவு சொல்லி முடிக்கற வரை பேசாத, அப்றம் நான் சும்மா இருக்க மாட்டேன்.", என கண்டிப்போடு தொடர்ந்தான், "நான் அந்த இயற்கைய ரசிச்சிட்டு ஒரு நெகிழ்ச்சியான உணர்வுல சுத்தியும் பாக்குறேன், திடீர்னு என் மனசு ரொம்ப ஸ்பீடா துடிக்கிது. எனக்கு மூச்சு முட்டுது. ஒருவித பதட்டம்...",

"ஹார்ட் அட்டாக்கா ராம்?", போலியான வருத்தத்தில் அவள் கேட்க...

"ஆ... பொடலங்காய் கூட்டு...", என முகத்தை திருப்பிக்கொள்ள, "சரி சரி இனிமேல் வாய திறக்கமாட்டேன் சிப்!", என தன் வாய் மீது விரலை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவளருகே இருக்கை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், அவள் இதழ் மீதிருந்த கையை நீக்கி, அவன் கைகளை வைத்து வாயை மூட, அவளோ விழிகளை விரித்து பார்க்க, "இதுதான் பனிஷ்மென்ட். கீப் சைலன்ஸ்!", என்று பொய்யாக மிரட்டினான் குறும்போடு.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now