அத்தியாயம் - 67

221 15 0
                                    


ஜெயந்தியிடம் ராம் கொடுத்த கடிதத்தை அன்று தான் பார்த்தாள்.

"அக்னி! நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக இப்போ வரை உன்கூட பேசுற முயற்சியை கூட நான் செய்யல. ஆனா நாம சந்திச்சு பேச வேண்டிய சூழ்நிலை வந்தபோது, நீயும் நானும் அதை எதார்த்தமா கடந்தோம்.

நான் நேராவே சொல்லிடுறேன் அக்னி. என்னால நம்மளோட காதல காப்பாத்திக்க முடியும்னு தோணல. என் வாழ்க்கையோட பாதையெல்லாம் பிழையா மாறிடுச்சு.

இனிமேலும் நீ என்ன பத்தி நினைக்காத. நீ சந்தோஷமா இருக்கனும். உன்னோட நலன்விரும்பியா உன்னோட வாழ்வு உன் விருப்பத்துக்கு ஏற்ப அமையனும்னு வேண்டிக்கிறேன்!

கடல் அலையான நீ,
கரையை தீண்டாதே...

நிலாவான நீ,
இரவில் தோன்றாதே...

பூமியான நீ,
என் செங்கதிர்கள் ஏந்தாதே!

மழையான நீ,
நிலம் என்னில் சேராதே!

காற்றான நீ,
என்னுடல் தீண்டாதே!

நீரான நீ,
என் கண்களை தழுவாதே!

வார்த்தையான நீ,
என் இதழ் வருடாதே!

எனக்கான நீ,
உனக்கான என்னை இனியும் தேடாதே!

ஐ மிஸ் யூ!

-தெரிந்தே உன் மனதை உடைத்தவன்!"

இவ்வாறாக அதில் எழுதியிருக்க அக்னிக்கு தலையே சுற்றியது. யாரிவன் என்னிடம் எதற்கு இவ்வாறு ஒரு கடிதம் கொடுத்திருக்கான். நான் அவனை காதலித்தது போன்ற பானியில் வேற எழுதியிருக்கான்! யாரிவன்... ஆனால் இந்த கையெழுத்து மித்து எழுதுவது போன்றே உள்ளதே!

யோசித்தவள் கிடுகிடுவென சென்று 'மித்ரன் தந்ததாக நினைத்துக்கொண்ட' அத்தனை கடிதத்தையும் எடுத்தாள்.

அதே கையெழுத்து எனில் எழுதியவன் யார்? மித்ரன் இல்லையா? என குழம்பியிருந்தவள் யாரது என யோசித்து யோசித்து நாட்களை தள்ளினாள்.

_ _ _ _ _

ராம் ஆகாஷின் பார்லரில் வேலை செய்வது, மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது, வீட்டு வேலைகளை கவனித்து கொள்வது, இதோட அக்னியின் முன்னேற்றத்தை செய்திகள் மூலமாக அறிந்துக்கொள்வது என வாழ்க்கை சென்றது. அவளின் குத்துச்சண்டை போட்டியை இருமுறை அரங்கத்திற்கு சென்று பார்த்துவிட்டு வந்திருந்தான்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now