அத்தியாயம் - 17

251 17 0
                                    


        மறுநாள் அதிகாலை எழுந்து, வழக்கம்போல் அக்னி வாசல் தெளித்து, கோலமிட்டாள். ஆனால், அகி அவள் கண்களில் சிக்கவில்லை. சரியாக வீட்டின் உள்ளே நுழையும்போது காலணி சத்தம் கேட்கவும், திரும்பியவள் முன் நின்றிருந்தான் அகி. வேகமாக அவனருகில் வந்த நின்றாள்.

"இன்னோரு முறை எங்க வீட்டுக்கு பக்கம் வந்த, ஜெயந்தி ஆண்ட்டிக்கிட்டயே சொல்லிடுவேன்.", என்று முறைத்தாள்.

"என்ன மாதிரியான பொண்ணு நீ?", அவன் கேட்க, அவள் அவனையே கையை கட்டிக்கொண்டு தீப்பார்வை பார்த்தாள்.

"ஹே நீ கோபப்படுறதுக்கு முன்னாடி, நான் கொஞ்சம் பேசிடுறேன்!

முதல் சாரி, உங்கப்பா வீட்டுல இல்லனு தெரிஞ்சு தான், உங்க வீட்டுக்குள்ள வந்தேன், அதோடு இவ்ளோ சீக்கிரம் தெருவுல யாரும் இருக்கமாட்டாங்க, அதுவும் தெரிஞ்சு தான் பேச வந்தேன்..

ரெண்டாவது சாரி, அந்த கப்ப உங்க வீட்டு திட்டுல வச்சு உன்ன டென்ஷன் பண்ணதுக்கு. கண்டிப்பா நீ அதை குப்பையில போட்டிருப்ப.

கடைசியா... ஒரு பெரிய நன்றி என்னோட சுமாரான கவிதைய படிச்சதுக்கு அப்றமும் நீ என்ன அடிக்காம பேசுறதுக்கு."

அவன் சொல்லி முடிக்கவும் அவளுக்கு இதழோரத்தில் சிரிப்பு பிறந்தது. மறுநொடியே அவனது காதலி பற்றி நினைவு வரவும் மறைந்தது.

"நீ ரொம்ப தப்பான பையன். எந்த மாதிரியான மனுஷங்களோட அப்பா அம்மா, பழககூடாதுனு சொல்வாங்களோ அந்த மாதிரியான ஆள் நீ.", என்றதும் அவளை ஆச்சரியமாக பார்த்து சிரித்தவன்,

"பரவாலயே! உங்க வீட்டுல பொண்ணும் பையனும் பழகுனா நட்பாவும் இருக்கும்னு  நம்புறாங்க போல.", என்றவன், "ஆனா ஒரு விஷயம், நான் தப்பானவன் இல்ல.", என்றான் அழுத்தமாக.

"ஓஹோ! அப்றம் ஏன் ஏற்கனவே ஒரு பொண்ண காதலிச்சிட்டே, எனக்கு காதல் கடிதமா தரீங்க?!", அவள் கேட்கவும், அவன் குழம்பினான்.

"என்ன சொல்ற நீ?"

அன்று அவனது பெரியம்மா, பெரியப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தது முதல், தான் கேட்டது வரை சொன்னாள்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now