அத்தியாயம் - 53

246 17 2
                                    


மறுநாள் காலையில் அனைவரும் அவரவர் இல்லம் நோக்கி கிளம்ப ஆயத்தமாக, விநாயகம் சித்தப்பா அக்னியிடம் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் ஊர்வசி சாணக்கியனோடு தனியே பேசிக்கொண்டிருந்தாள்.

"ஜானு! உனக்கு எல்லாமே ஓகேதானே! சந்தோஷமா இருக்கியா?", என்றவளை அவன் கேள்வியாக பார்க்க, "இல்ல ஏன் கேட்டேனா... உன் முகத்துல ஒரு இறுக்கம் இருந்துட்டே இருக்கு. அண்ணி ரொம்ப நல்லவங்க தான். ஆனா உன் பத்தி பெருசா தெரிஞ்சவங்க போல் அவங்களும் இல்ல. உங்களுக்கு நடுவுல புதுசா கல்யாணம் ஆனங்களுக்கான மலர்ச்சியே இல்ல. எதாவது மறைக்கிறியா ஜானு?", ஊர்வசி இப்படித்தான். சாணக்கியன் முகத்தை வைத்தே அத்யனையும் கண்டுபிடிக்கும் புத்திசாலி. அவனாலும் அவளிடம் எதையும் மறைக்க இயலாது. ஆனால் சமீப நாட்களாக அவனது வாழ்க்கையில் நடப்பவையை அவளிடம் கூறி, கருவுற்றிருக்கும் தங்கையை மன வருத்த விருப்பவில்லை அவன்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல. அந்த ட்ரீட்மெண்ட் நினைச்சு கொஞ்சம் பயம். அதான்!", என்று சமாளித்தான்.

அவள் பெருமூச்சுவிட்டு, "இதுக்குதான் இப்டி சுத்திட்டு இருந்தியா? நான் ரொம்ப பயந்துட்டேன்டா.", என்றிட, அவள் தலை வருடி, "ரொம்ப யோசிக்காத! சந்தோஷமா இரு!", என்க, அவள் அவனை அணைத்துக்கொண்டாள்.

"பாசமலர்களே! பேசியாச்சா?", கூடத்திலிருந்து விழுந்தது விஷ்ணுவின் கேலி குரல்.

"ரொம்பத்தான்!", என்றபடி வந்த ஊர்வசி, அவனது முகவாயை இடிக்க, அனைவருமே சிரித்துவிட்டனர்.

_ _ _ _

இன்று சாணக்கியனுக்கு அறுவை சிகிச்சை. கோவிலுக்கு சென்று எடுத்து வந்திருந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டு அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் எதையோ முணுமுணுத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் விநாயகம்.

அவர் அருகே மிகவும் இயல்பாக கைகளை கட்டிக்கொண்டு சன்னமான குரலில், அனோகியிடம் அலுவலக விஷயங்களை பேசி முடித்து, அவளை புறப்படக்கூறினாள் அக்னி.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now