அத்தியாயம் - 35

255 18 6
                                    


அக்னியும், மித்ரனும் அவளது கல்லூரி நோக்கி பயணத்துக்கொண்டிருந்தனர். பல மாதவங்கள் கழித்து இன்று தான் அவனை கவனித்தாள்.

முன்பிருந்த குறும்புக்காரன் சென்று இப்போது முழு தொழிலதிபனாக மாறியிருந்தான். முன்பெல்லாம் காலரை மடக்காமல், சட்டை முழுங்கை வரை மடித்து இழுத்துவிட்டு, சட்டையின் முதல் இரு பட்டன்களை கழட்டிவிட்டு, அடாவடி செய்பவனை போல் தான் இருக்கும் அவனது தோற்றம், ஆனாலும் அவனை ரசிக்காத கண்கள் இல்லை.

இப்போது அதைவிட அம்சமாக, பார்மல்ஸ் உடை அணிந்து, அளவான மீசையோடு, பார்க்கவே 'சோ க்யூட்!', என்று கன்னம் கிள்ளத்தோன்றும் மாயவனாகவும், பொறுப்பானவனாகவும் இருந்தான்.

அன்று, இன்று என பிரித்து பல வேறுபாடுகளை அவனிடம் கணக்கிட்டுக்கொண்டிருந்தாள். அவளது விழிகள் தன்னை கவனிப்பதை உணர்ந்தவனுக்கு காதலனுக்கே உரித்தான மலர்ச்சியும், மகிழ்ச்சியும் சேர்ந்திட, இனிமையான பயணம், கல்லூரி வளாகத்தில் வந்து முடிந்தது.

அவள் இறங்கி, உள்ளே செல்லாமல் தயக்கமாக அவனை பார்க்க, "தைரியமா போ! உன்ன யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க. நீ நீயாவே இரு.", என்று கூற, அப்போதும் தயங்கியபடி தரையை தேய்த்தவளிடம், "அகி குட்டி போடா!", என்று கனிவான குரலில் தலை வருட, ஆனந்தமாக அதிர்ந்து நிமிர்ந்தாள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் மென்னகை புரிந்து கையசைக்க, அவள் தலையை ஆட்டிவிட்டு வகுப்புக்கு செல்லவும், இங்கு ராம்குமாரை சந்திக்க ப்ரின்சிபல் அறைக்கு வந்தான்.

"மே ஐ கம்மின் சார்!", என்ற குரல் வைத்தே யாரென உணர்ந்த ராம் புன்னகையோடு, "வா மித்ரன்.", என்றார் உரிமையான குரலில்.

"எப்டி இருக்கீங்க சார்?", என கேட்டுக்கொண்டு அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் வந்தமர்ந்தான்.

ஏற்கனவே அவரிடம் தனக்கும் அக்னிக்குமான காதல் பற்றியும், வீட்டினர் சம்மதம் பற்றியும் கூறியிருந்தான். அவர்களது காதல் பற்றி தெரிந்ததும் முதலில் அதிர்ந்தவர், பிறகு அவனது நம்பிக்கையான பேச்சில் தோள் தட்டிவிட்டு சென்றிருந்தார். பரஸ்பர நல விசாரிப்புகள் முடியவும், அக்னி பற்றி பேச்சை ஆரம்பித்தவனிடம்,

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now