அத்தியாயம் - 13

270 17 0
                                    

           "ராம் இல்லம்", என்று தங்க வண்ணத்தில் பொறிக்கப்பட்டிருந்த வீட்டு வாயிலை இருபது முப்பது இரு சக்கர வண்டிகள் முற்றுகையிட்டது, அவர்களது திடீர் வருகையில் வாயிலில் நின்றிருந்த பாதுகாவலர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

          பெரும் சப்தத்துடன் நுழைந்தனர். கையில் ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் பேட், இன்னும் பல ஆயுதங்கள், அவர்களை பார்க்கவே நெஞ்சம் பதறியது, அதில் நமது புதியவனும்(அகி) அடக்கம். அவர்களை காண சற்று மிரட்சியாக தான் இருந்தது.

        சத்தம் கேட்டு வீட்டினர் வெளியே வந்தனர், பைக்கை முறுக்கிக்கொண்டு, வீராப்பாக நிற்பவர்களை கண்டு அவ்வீட்டு பெண்மணிகள் அதிர்ந்துப்போக, ஆண்களோ இறங்கி வந்து, "யாருடா நீங்களாம்? உங்கள யார் உள்ளவிட்டது? என்ன நெஞ்சு தைரியம் இருந்தா உள்ளார வருவீங்க?", என்று முப்பது வயதை ஒத்திய ஒருவன் எகிறினான்.

        பைக்கிலிருந்து இறங்கினான் அகி, அவனை தொடர்ந்து மற்றவர்களும், இறங்கி அவனருகே நின்றனர்.

"வர சொல்லு உங்கப்பாவ!", அகி கடுகடுவென கூறினான்.

"எதுக்கு? சொல்ல முடியாது. மொதல கிளம்புங்கடா!", எகத்தாளமாக கத்தியவனை அலட்சியமாக பார்த்தவன், மற்றவர்களுக்கு கண்ணை காட்டினான், தடாலடியாக அனைவரும் வீட்டிற்குள் புகுந்தனர்.

தடுத்து நிறுத்த முடியாத, புயலின் சிற்றத்துடன் வந்தவர்களை, மாடியிலிருந்து இத்தனையையும் கவனித்துக்கொண்டிருந்த ராம்குமார் மென்னகையோடு அகியின் பட்டாளத்தை நோக்கி வந்தார். ஏற்கனவே பரிச்சயமானவனை போல் அகியை கண்ட ராம்குமார், "என்ன அகி! சஸ்பண்ட் பண்ணி ஒருவாரம் கூட ஆகல. அதுக்குள்ள அடுத்த பிரச்சனையா?", அதிருப்தியுடன் கேட்டவர், "உட்காருங்க எல்லாரும். என்ன சாப்பிடுறீங்க?", அவரது கேள்வியில் வீட்டினர் கலவரமாக, 'என்னடா நடக்குது இங்க?', என்ற ரீதியில் முழிக்க, ராம் தன் மனைவியிடம் கண்பார்வையில் எதையோ உணர்த்த, அடுத்த சில நிமிடங்களில் அகியின் பட்டாளம் ஒருபுறமும், ராம்குமார் மற்றும் சற்றும் முன்பு அகியிடம் வாக்குவாதம் செய்த அவரது மூத்தமகன் சஞ்சய் ஒருபுறம் நின்றிருந்தனர்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now