அத்தியாயம் - 29

244 19 4
                                    

அக்னி தனது காதலை வெளிப்படுத்தியதை அசைப்போட்டபடியே, அறைக்குள் நுழைந்த சாணக்கியன் மனம் விரக்தியில் சிரித்தது. அவள் மனமார எந்த வார்த்தையையும் உதிர்க்கவில்லை என்பதை அவளது உடல் மொழி காட்டிக்கொடுத்தது.

அவளது மெய்யில், மெய்யான அசைவுகள் இல்லை, மாறாக தான் பொய் உரைப்பதை கண்டு விடக்கூடாது என்ற மறைக்கும் முயற்சி மட்டுமே இருந்தது.

"நீ என்ன காதலிக்கிறேன் சொன்ன பொய்'க்கு பதிலா, பிடிக்கலைன்னு சொல்ற உண்ம அவ்ளோ வலிக்காது அக்னி. ஒரு வக்கீலா யார் உண்ம பேசுறாங்க, பொய் பேசுறாங்கனு கூட கண்டுபிடிக்க முடியாதவனா நான்!

எப்பவுமே என் காதல நீ புரிஞ்சிக்கவே மாட்டியா? ஏன் என்ன கல்யாணம் பண்ண? அதுவும் இத்தன நாளா கல்யாணமே வேணாம்னு இருந்தவ, என்ன ஏன் கல்யாணம் பண்ண?

மர்மராணி!
இன்னும் என்னலாம் என்கிட்ட மறைக்கிறடி நீ? உன்னோட அப்பா, தம்பி, அப்றம் மித்ரன், உன் நடனம், இதெல்லாம் எங்கப்போய் ஒளிச்சு வச்திருக்க? உன்னயே நீ எங்கயோ தொலைச்சிட்ட அக்னி. இப்ப இருக்குறது நான் பார்த்த அக்னி இல்ல.", என்று வேதனையின் உச்சியில், அவனது மனம் தனது பழைய நினைவுகளில் சஞ்சரித்த அக்னியிடம் வலிக்க வலிக்க முணுமுணுத்தது.

"இப்போது இருக்கும் அக்னி'க்கும், பழைய அகி'க்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

சிரிக்க மறக்காத அகி...
சிரிக்கவே யோசிக்கும் அக்னி!
உணர்வுகளின் குவியலான அகி...
உணர்வுகளை வெளியிடாத அக்னி!
கண்களாலே எவரையும் ஈர்த்திடும் அகி...
கண்களாலே ஒருவரை எடைபோடும் அக்னி!
தனிமை தெரியாமல் வாழ்ந்த அகி...
தனி வட்டமிட்டு வாழும் அக்னி!
மென்மையான அகி...
வன்மையான அக்னி!
துறுதுறுவென அகி...
கடுகடுவென அக்னி!
பூவாக இருந்த அகியின் வாழ்க்கையில்...
விதி ஏற்படுத்திய மாற்றம்!
வீசும் பூகம்பமாக உருவான அக்னியின் தோற்றம்!!!

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now