அத்தியாயம் - 19

234 19 0
                                    

நூலகம் வந்த அக்னி, தான் தேடி வந்த புத்தகம் கிடைக்கவும், விரைவாகவே அங்கிருந்த வெளியே வர, அவளது சைக்கிளின் முன் இருந்த கூடையில், கடிதம் ஒன்று ரிப்பன் சுற்றப்பட்டு காட்சியளித்தது. அதை கண்டவளது மனம் மற்றதை மறந்து முதலில் சிந்தித்தது, 'அகி வந்துவிட்டானா?', என்பது தான்.

அவனிடம் அன்று போய் வருகிறேன் என்று கடமைக்கு கூட சொல்லவிலலையே என்று நினைத்து பல நாள் வருத்தப்பட்டிருக்காள். அதன் பின்னர் எங்கும் அவனை காண முடியவில்லை. ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஓடியிருந்தது.

அவன் தன் முன் வருவதற்கும் முன், அவனது எழுத்துக்கள் அவன் பால் ஈர்த்துவிடுகிறதே என்று சிரித்துக்கொண்டாள்...

வேகவேகமாக கடிதத்தை பிரித்தாள். ஒவ்வொரு வரியிலும் கம்பீரபாக தனது காதலை கூறியிருந்தான். அவ்வழுத்துக்கள் அவனது காதலை மெருகேற்றி காண்பித்தது. பிரிவு, சோகம், ஏக்கம், எல்லாமே வார்த்தையிலும், வரிகளிலும் கொட்டி தீர்த்திருந்தான்.

"இயற்க்கையின் நிழலை தாங்கும் பூமிக்கு...
நிழல் ஏந்திடும் வாய்ப்பளிக்கும் வெளிச்சம் நீ!
நிலத்திலே முத்தமிட்ட உன் பாதங்களை வர்ணிக்க இயலுமோ?
நயனமொழிகளை காட்டி..
அழகாக நீ நாட்டியம் ஆட...
உன் வசமான எனது மனதின் தளம் தப்பியது!
நடன போட்டியில் வெற்றி பெற்ற உனை அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்க,
எதிர்த்தமாக நீ எனை கண்ட நொடி,
இயல்பை தொலைத்தேன் காரிகையே!",

அவன் எழுதியிருந்த வரிகளில் மனம் தடுமாறியது. புதைக்கப்பட்டதாக அவள் நினைத்த காதல் கூட மீண்டும் துளிர்விட துவங்கிய நிலையில், இதை படித்தவளது முகத்தில் இப்போது பல உணர்வுகள். 'அப்டினா அகிக்கு என்ன ஏற்கனவே தெரியுமா? இவனோட காலேஜ்க்கு ஒரு போட்டிக்காக நான் போயிருந்தேன் தான். அன்னிக்கி அவனோட வீட்டுல இருந்தப்போவே ஏன் சொல்லல! ஞாபகமில்ல போல!', என நினைத்தவள், படிப்பதை தொடர்ந்தாள்.

"ஆர்பரிப்பில்லாத ஆழ்கடலாக,
நெஞ்சின் ஆழத்திலே வேர்விட்டு ஆக்கிரமிப்பு செய்தாய் நீ!

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now