அத்தியாயம் - 46

224 16 4
                                    


சஞ்சய் புறப்பட்டதும், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாக அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்தவள், மீத்ரன் அறைக்குள் நுழைந்து ஆளுயரத்தில் மாட்டப்பட்டிருந்த அவன் படத்தின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவள், ஆவென கத்தி அழ ஆரம்பித்திருந்தாள்.

அவளது சத்தமான குரலில், வீட்டிலிருந்த ஜெயந்தி பதறிப்போய் மாடியேறி வர, அவளது கோலம் கண்டு துடித்துப்போனவராக, "அகிமா! என்னடா ஆச்சு?", என தலையை வருட, மண்டியிட்ட வாக்கிலே அவரது இடையை கட்டிக்கொண்டவள், "நானே என் அப்பாவ, மித்துவ கொன்னுட்டேன் அத்த! என்னால தான் அவங்களாம் செத்துப்போனாங்க... எனக்காகவே வாழ்ந்தவங்கள நானே கொன்னுட்டேனே!", என தலையில் அடித்துக்கொள்ள, அவரது தாயுள்ளம் மனதுள் ரத்தம் வடித்தது.

காலையில் நன்றாக அலுவலகம் சென்றவள், பாதி வேலையோடு வந்திருப்பதும், இப்போது அழுகையோடு புலம்புவதும் சரியென படவில்லை, ஏதோ நடந்துள்ளது என்பது மட்டும் புரிந்துக்கொண்டார்.

"அத்த! ஐம் ஓகே! கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேன். ப்ளீஸ்...", என இறைஞ்சலோடு அவரிடம் சமாதனக்குரல் கேட்க, மறுக்காமல் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

தரையில் சாய்ந்து படுத்தவளுக்கு, அபியோடு அவள் ஆடிய நடனம், அவரது அறிவுரைகள், அவர் சமைத்த உணவு, அவரோடு ஊர் சுற்றியது, அவ்வப்போது அனந்த்தால் நிகழும் விளையாட்டான வாக்குவாதம், அவர் தனது கனவுக்கு உந்துகோளாக இருந்தது, இறுதியில் விட்டுச்சென்றது என அழுதவள், "என்னால தான நீங்க என்னவிட்டு போனீங்கப்பா? எவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன். நான் ரொம்பவே பேட் கேர்ள் தானப்பா. ஐம் சாரி சாரி, ரியலி சாரி!", என விசம்பலோடு புலம்பியவள், தனக்கெதிரே தெரிந்த மித்ரனது புகைப்படம் கண்டதும் விசும்பல் மீண்டும் அழுகையாகியது. மித்துவோடான எல்லா தருணமும் வரிசைக்கட்டி நின்றது.

"காபி குடிச்சிட்டு, கப்ப திருப்பி தர தேவையில்ல, நீயே என் ஞாபகமா வச்சிக்கோ!", அவர்களது முதல் சந்திப்பில் அவன் கூறியது, ஆனால் அவள் கோபமாக அந்த கப்பை உடைத்திருந்தாள்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now