அத்தியாயம் - 45

246 15 9
                                    

அஜய் அக்னியிடம் தவறாக பேசியது, அவளை அவதூறாக பேசிய நண்பர்களை கொன்றது என வீட்டிற்கு செல்லாமல் தனது கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து நடந்தவற்றை யோசித்தவனுக்கு, அக்னி வேண்டும் என்ற வெறி பலமடங்கு இருந்தது.

மித்ரனோடு இளங்கலை படிப்பை, ராம்குமார் ப்ரின்சிபலாக இருக்கும் கல்லூரியில் படித்தவன் தான் அஜய்.

செல்வ சீமாட்டி என்ற மிதப்பிலும், மமதையிலும் சுற்றுபவனை கண்டு யாருக்கும் பிடிக்காது. அதே போல் இவனுக்கு நேரெதிராக... மாணவர்களின் நலனுக்காக, பெண்களின் கனவு மன்னனாக, தப்பை தட்டிக்கேட்கும் துணிச்சல் கொண்ட அக்னிமித்ரனுக்கு மவுசு அதிகம் தான். இதனால் மித்ரன் என்றாலே அஜய்க்கு அலர்ஜி போல் ஆனது. இதனாலே மித்ரனோடு வலிய வந்து சண்டையிடுவான்.  மித்ரன் வார்த்தையில் பல முறை கண்டித்தும் பலனில்லாது போக, அவனும் கை ஓங்க என ரவுடிகள் போல் அடிதடி ஆரம்பித்துவிடுவர்.

இதன் காரணமாக, அஜய் மனநிலை மாற்ற ராம்குமார், அதன் பின்னர் அவனை வெளிநாடு அனுப்பி வைக்க, எவ்வித தொல்லையும், பிரச்சனையுமின்றி நாட்கள் சென்றது.

மூன்று வருடம் கடந்து, தாயகம் வந்த அஜய் தான் படித்த கல்லூரி கல்டுரல்ஸ் காண ராம்குமாரோடு வந்திருந்தான். அக்னி பயிற்சியளித்த நடனம் அவனை வெகுவாக கவர, அவளது நடன குழுவின் வெற்றி பெற்றபோது மேடையில் இருந்த அக்னியை கண்டு சலனப்பட்டான்.

பெண்களை காணதவனில்லை அஜய். அவனுக்கு ஒரு பெண்ணை பிடித்தால், அவளை எப்படியேனும் தனக்கு பணிய வைத்திடுவான். வெளிநாட்டிற்கு சென்று அந்நாட்டு மோகத்தால் இன்னும் அசுத்தமாகியிருந்தது அவனது மனமும் மூளையும்.

அதன் பின்னர், ஒரு நாள் அவளை கடத்தி, மிரட்டி பார்த்தான். அவளோ மித்ரனிடம் தெரிவித்தாள். அக்னிமித்ரனோட அபியும், ராம்குமார் வீட்டிற்கு இவ்விஷயத்தை பற்றி பேச சென்றார்... உண்மையில் மகனின் செயலை எண்ணி வெட்கிய ராம்குமார், அவனை கண்டிப்பதாக கூறி உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now