அத்தியாயம் - 55

240 14 2
                                    

சங்கமித்ரன் செயலில் கொதித்த மனதோடு வீட்டை அடைந்த அக்னி, நேராக குளியலறைக்குள் நின்றுக்கொண்டாள். அவன் பின்னங்கழுத்தை பற்றியது, ஏதோ பாம்பு கழுத்தை சுற்றி வலைத்தது போல் அருவருத்தது.

ஷவருக்கு கீழே நின்றவளுக்கு தோன்றிய எண்ணம், 'இவனும் அந்த அஜய் போல் தான்!', என்பதே.

ஒருவனின் மனைவியாக வாழ்கிறவளிடம் எத்தனை இழிவாக அவ்வாறு பேசிவிட்டான். ச்சே! அவனது உடன்பிறப்பு அக்னிமித்ரனுக்கு செய்யும் துரோகம் என்ற எண்ணம் கூடவா இருக்காது!

அவளால் தனது ஆத்திரத்தை தீர்க்க முடியவில்லை. ஒருமணி நேரத்திற்கு மேலாக ஷவருக்கு கீழேயே நின்றிருந்தவள், லேசாக குளிராக தோன்றவும், அதுவரை தற்காலிகமாக மறந்திருந்த அவளின் சாணக்கியன் நினைவு வரவும், நடந்த நிகழ்வுகளில் தன்னவனை விட்டுவந்ததை எண்ணி நொந்துக்கொண்டவளாக வேகமாக குளியலைறை விட்டு வெளிவந்து மாற்றுடை அணிந்தவள், தனது அலைப்பேசியை எடுக்க அதில் பல தவறிய அழைப்புகள் தெரியவும், குழம்பிப்போனாள். அனோகி, சஞ்சய், விநாயகம் என வரிசையாக அழைத்திருந்தனர்.

முதலில் அனோகிக்கு அழைத்தாள். அந்த பக்கம் எடுத்தவளோ, "அக்கா! நீ எங்க இருக்க? உடனே ஹாஸ்பிட்டல் வா. வேற எதுவும் கேட்காத!", என்று அழைப்பை முடித்துவிட்டாள். அக்னி துரிதமாக மருத்துவமனைக்கு வந்து சேர, அங்கு சஞ்சய் தலையை தாங்க அமர்ந்திருக்க, அனோகியும், விநாயகமும் அழுதுக்கொண்டிருந்தனர்.

"என்னாச்சு?", மூவரையும் ஆராய்ந்தபடி அவள் கேட்க,

"சாணக்கியன காணோம்!", என்றாள் அனோகி.

"புரியல.", என்றாள் அக்னி.

"சாணக்கியன் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்ததால அவரோட இருந்த நர்ஸ் ஷிப்ட் முடியற டைம் என்பதால கிளம்பிட்டாங்க. அடுத்த நர்ஸ் வரதுக்குள்ள இவர் எங்கனு தெரியல. சஞ்சய் கிட்ட வந்து, நர்ஸ் சொல்லவும் சிசிடிவில பாத்தா, சாணக்கியன் எங்கேயோ எழுந்து வெளியில போயிருக்கிறதா காட்டுது. எங்களுக்கு என்ன செய்றதுனே தெரியல.", என கோர்வையாக நடந்தவற்றை கூறினாள்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now