அத்தியாயம் - 58

269 15 0
                                    


சாணக்கியன் ஜானகி ராமச்சந்திரன்!

"ஜானு கண்ணா!", சித்தப்பா விநாயகத்தின் குரல் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான் சாணக்கியன்(ஜானகி ராமச்சந்திரன் எனும் ராம்)

இந்த இரு மாதங்களாக இது தான் வழக்கமாகிப்போனது. இரு மாதங்கள் முன்பு, விஷேசம் ஒன்றுக்கு சென்று வரும் வழியில் விபத்து ஒன்றில், அவனது பெற்றோர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக இறந்துவிட, ஜானு நொந்துவிட்டான். அவன் தங்கையான ஊர்வசியையும், அவனையும் தாங்கிப்பிடித்தது அவர் சித்தப்பா விநாயகம் தான். கோவில் பணிகளில் ஈடுபட்டு காலத்தை தள்ளியவர், அவ்வப்போது அண்ணன் குடும்பத்தோடு நலம் விசாரிப்பார். ஆனால், அண்ணன் குடும்பமே இப்போது சீர் இல்லாது போக, தனது அண்ணன் பிள்ளைகளுக்காக அவர்களோடு தங்கிக்கொண்டு அனைத்தும் செய்தார். அது ராம் மற்றும் ஊர்வசிக்கு பெரும் நிம்மதியை தந்தது.

அன்னையின் குரலோசை இல்லாத விடியலோடு ஒவ்வொரு நாளையும் தொடங்குவது மிகவும் கடினமாகியது.

இயல்பிலேயே மிகவும் துடுக்கத்தனமானவன் ராம், பேசுவது மனித இயல்பு, ஆனால் தனித்துவமாக பேசுபவன் இவன். அவனது கண்வழியாக இவ்வுலகை கண்டால் எல்லாமே வித்தியாசம் தான், ஆனால் அவனுக்கு அது இயல்பான ஒன்று.

முதலாமாண்டு கல்லூரியின் இறுதியில் இருக்கிறான். தங்கை ஊர்வசி பதினோராவது வகுப்பில் உள்ளாள்.

சித்தப்பா உணவை சமைத்து பெட்டியில் கட்டி வைத்து, இருவரையும் கிளப்பினார். ராம் கல்லூரிக்குள் நுழைய, அன்று கல்லூரி மிகுந்த பரபரப்போடும், வண்ணமயமாகவும் காட்சியளிப்பதை கண்டவனுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது இன்று அவர்கள் இன்ஸ்டிடியூட்டில் உள்ள பள்ளி ஒன்று இங்கு கலை நிகழ்ச்சி கொண்டாட வருவதாக அறிவிப்பு வந்தது ஞாபகம் வர, வண்ண வண்ண அடையும் அலங்காரமுமாக சுற்றிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் ஒரு குறுஞ்சிரிப்போடு கண்டவன் தனது நண்பனை தேடி வந்தான்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now