அத்தியாயம் - 57

239 15 2
                                    

சாணக்கியன் தலையில் இரும்பு ராட் கொண்டு அடித்து, அவனை உதைத்து கீழேத் தள்ளியவன், "முதல மித்ரன், இப்போ நீ... என் கையால சாகனும்னே வருவீங்களாடா!", என்றவன், "இப்பவுன் நான் யார்னு தெரியலையா.... தி கிரேட் அஜய் ராம்குமார்.", என பெருமை பாடி சிரித்தவன், சாணக்கியன் கண்கள் சொருகும் வரை கண்டு, "யூ ஆர் டன்!", என்று ஏளனமாக சிரித்துக்கொண்டவன், அங்கிருந்த திண்டை பற்றி சிகரெட் பிடித்து நின்றுவிட்டான்.

ஆனால் கீழே விழுந்த சாணக்கியனுக்கு, கிணற்றுக்குள் இருந்த ஏதோ ஒரு குரல், அவனை நோக்கி, "ராம்!", என்று ஒலித்து, அவனது சொருகிய கண்களை மீண்டும் விழிக்க செய்தது. அவனது குருதி துளிகள் தரையில் தெறிந்திருந்தது.

"ராம் ராம் ராம்...", என்றே ஒரே குரல், அவனது செவியை கிழித்தது. மறுபுறம் அவன் மயங்கியதாக எண்ணிய சங்கமித்ரன் எனும் அஜய், அவனை ஒரு தனியறையில் இழுத்து வந்து, அவனது கை கால்களை சங்கிலியில் பிணைத்து கட்டி வைத்து, வெளியே சென்றுவிட்டான்.

மீண்டும் அதே குரல் இப்போது அவன் நெஞ்சின் ஆழத்தில் பூட்டி வைத்த நினைவுகளை வரிசைப்படுத்தியது...

அதேநேரம் காரில் அலைந்து திரிந்துக்கொண்டிருந்த அக்னி, சாணக்கியன் அவனாக கொடுத்த டைரியை, ஒருநாள் படித்தபோது, சாணக்கியன் ஜானகி ராமச்சந்திரனின் கடந்த காலம் பற்றி அறிந்ததை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு சின்ன பயாஸ்கோப்🎥...
இது சாணக்கியனின் காதல்💞...

(மக்களே! நிறைய ப்ளாஷ் பேக் வரதால கன்ப்யூஸ் ஆகுதா? பட் கதைக்கு தேவை என்பதால தான் நிகழ் காலம், கடந்த காலம்னு மாத்தி மாத்தி வருது🤐. சாணக்கியன் ப்ளேஷ் பேக்ல பல விஷயங்கள் தெளிவாகும்😇. இரண்டு மூன்று அத்தியாயத்தில் ப்ளேஷ் பேக் முடிக்க பாக்குறேன்.😁 சின்ன அப்டேட் என்று கோச்சிக்காதீங்க... ஒரு 😁flowக்காக தான் இங்கயே இந்த அத்தியாயத்த முடிக்கிறேன். நன்றி🌼)

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now